என் மலர்
ஈரோடு
- வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்க ன்கோ ட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்க டேஷ். இவரது மனைவி காயத்திரி (வயது 22). இவர் வீட்டில் இருந்து வந்தார்.
இவர்களுக்கு கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை வெங்கடேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காயத்திரி குழந்தையுடன் வீட்டில் இருந்தார்.
வெங்கடேஷ் வேலைக்கு சென்று விட்டு மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் காயத்திரி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவி ல்லை.
இது குறித்து வெங்கடேஷ் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.
- வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் அடுத்த பெருமா பாளையம் அழகு நகரை சேர்ந்தவர் சகுந்தலா. இவர் சுமார் 10-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆடுகளை சகுந்தலா இரவு வழக்கம் போல் தனது வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார்.
பின்னர் இன்று காலையில் எழுந்து பார்த்த போது ஒரு ஆடு மட்டும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சகுந்தலா அப்பகுதியில் தேடி பார்த்தார்.
அப்போது அதே பகுதியில் உள்ள சாமி யாத்தாள் என்பவரது வாழைத்தோட்டத்தில் காணாமல் போன ஆடு இறந்து கிடந்தது. கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த ஆட்டை மர்ம விலங்கு கவ்வி சென்று கொன்றிருக்க லாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நகலூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தியூர் வனத்துறையி னருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. மர்ம விலங்கால் ஆடு கொல்ல ப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
- ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஈரோடு:
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு விரதம் இருந்தனர்.
30 நாட்களாக விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு வருட சேமிப்பில் இரண்டரை சதவீதம் ஏழை மக்களுக்காக ஜகாத் எனும் இஸ்லாமிய வரியை செலுத்துவார்கள்.
அதனைத்தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டி கையையொட்டி காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுவதற்கு முன்பு ஏழை மக்களின் வீட்டிற்கு சென்று ஒரு நபருக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் பித்ரா என்னும் வரியை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரம்ஜான் சிறப்பு தொழு கையில் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 40 ஈத்கா மைதானங்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 240 -க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று காலை ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது ஜிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஏராளமான சிறுவர்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்காக வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.
இதேபோல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது.
இதில் ஈரோடு பெரியார் நகரில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பிரியா ணியை தங்களது உறவினர்க ளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கோபியில் ஈதுஹா பள்ளி வாசலிலும், சாமிநாதபுரம் பள்ளிவாசலி லும் ஊர்வ லமும், சிறப்பு தொழுகையும் நடை பெற்றது. இஸ்லாமி யர்கள் தொழுகை முடிந்தவு டன் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்ட னர்.
அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து அந்தியூர் பெரிய ஏரி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்திற்கு இஸ்லாமியர்கள் டாக்டர்.சாகுல் ஹமீது தலைமையில், சையத் சையது கவுஸ் இமாம் முன்னிலையில் ஊர்வ லமாக சென்று ரம்ஜான் சிறப்பு தொழுகை செய்த னர்.
பின்னர் கட்டி தழுவி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் சத்தியமங்கலம் மணி கூண்டு திடலில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்ப ட்டோர் புறப்பட்டு ஊர்வல மாக சென்று பழைய மார்க்கெட் வீதி, கோட்டு வீராம்பாளையம் ஆகிய முக்கிய இடங்களில் ஊர்வல மாக சென்று கோட்டு வீராம்பாளையம் அருகே உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
- 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
- தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.
சத்தியமங்கலம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலா ளர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூருக்கு வந்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் குளிப்பதற்காக இறங்கினர்.
அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.
இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசிங் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். இதில் அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்து உடலை பிணமாக மீட்டனர்.
ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.
இதற்கிடையே இரவு 8 மணி ஆனதால் மிகவும் இருட்டாக காணப்பட்டது. இதனால் அவரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியை நிறுத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை எரங்காட்டூர் பகுதிக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவகுமாரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமான பொதுமக்கள் 2-வது நாளாக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை உருவானது.
- ஊர்வலமாக கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.
- சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஈரோடு:
ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்திய அளவில் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் காங்கிரசார் பல்வேறு கட்ட போராட்ட ங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலை யில் மேற்கண்ட கோரிக்கை யை வலியுறுத்தி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். தடையை மீறி போராட்டம் நடைபெற்றால் கைது செய்யவும் நடவடிக்கைக்கு தயாராக இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை எஸ்.கே.சி. ரோட்டில் காங்கிரசார் ஒன்று திரண்டனர். மாநகர பொறு ப்பாளர் திருச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பி னரும், கவுன்சிலரு மான ஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்ராஜா, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்த லைவர் ஜாவர் அலி,
மாநில ஒருங்கிணைப்பாளர் ஜிப்பர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு பாட்ஷா, முகமது யூசுப், கனகராஜ், விஜயலட்சுமி உள்பட கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நால்ரோட்டிற்கு கையில் பூட்டுடன் காங்கிரசார் சென்றனர்.
அப்போது சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி பூட்டு போடும் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.
இதனால் காங்கிரசார் மேற்கொண்டு செல்லாமல் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பி அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
- 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்க ன்கோட்டை பாசன வாய்கால்கள் மூலம் கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்பேரில் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் வினாடிக்கு 200 அடி கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
முதல் போக பாசனத்திற்கான தண்ணீரை பொதுப்பணித்துறை பொறியாளர் சதீஸ், டி.என்.பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.சிவபாலன் மற்றும் விவசாயிகள் திறந்து வைத்தனர்.
மேலும் முதல் போக பாசனத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வணங்கினர். இந்த முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தடப்பள்ளி அரக்கன்கோட்டை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
- வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
- குடிபோதையில் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பா ளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (52). அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி விஜயா (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வேல்முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.
இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவி விஜயாவும், மகனும் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
மேலும் அவர் குடிபோதையில் கைகள் இரண்டையும் பிளேடால் அறுத்து கொண்டது தெரிய வந்தது.குடிபோதையில் வேல்முருகன் இதுபோல அடிக்கடி ஏதாவது செய்து கொள்வது வழக்கமாம்.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வேல்மு ருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
- ரூ.1.11 கோடி விவசாயிகள், வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.
- இநாம் தொடங்கி 35,300 டன் விளை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றையின் கீழ் 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம்,
2 உப விற்பனை கூடங்கள் இயங்குகின்றன. இங்கு மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட 20-க்கும் மேற்ப ட்ட விளை பொருட்கள் ஏல முறையில் போட்டி விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த 2022–-23-ல் 2 லட்சத்து 40 ஆயிரத்து 063 டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அரசுக்கு ரூ.14.24 கோடி வருவாய் கிடைத்தது.
மேலும் 80,101 டன் விளை பொருட்களை பரிவர்த்தனை மற்றும் இருப்பு வைத்து பொருளீட்டு கடனாக ரூ.1.11 கோடி விவசாயிகள், வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.
அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு உட்பட்ட பர்கூர் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொந்த கட்டடத்தில் செயல்படுகிறது.
காய்கறி, கீரை, பழங்கள், இதர வேளாண் பொருட்கள் சத்தியமங்கலம், கோபி, புன்செய் புளியம்பட்டி, அந்தியூர், கொடுமுடி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூட குளிர்பதன கிடங்குகளில் 5,489 டன் இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
தேசிய வேளாண் சந்தை திட்டம் எனப்படும் இ–நாம் திட்டம் ஈரோடு, பெருந்துறை, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022-ல் அவல்பூந்துறை, பூதப்பாடி, பவானி, கொடுமுடி, சிவகிரி, புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, வெள்ளாங்கோவில், எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும் இநாம் தொடங்கி 35,300 டன் விளை பொருட்கள், 224.32 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.
தவிர இநாம் செயலி மூலம் தங்கள் பண்ணையில் இருந்தே தரம், அளவு ஆகியவற்றை அதிகாரிகள் உதவியுடன் பதிவேற்றியும் பண்ணை வழி பரிவ ர்த்தனை செய்கின்றனர்.
மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் அவல்பூந்துறை, எழுமா த்தூர், கொடுமுடி, சத்திய மங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கடந்தாண்டு 2,081 டன் கொப்பரை தேங்காய் கொள்முதலானது.
நடப்பாண்டு அவல்பூ ந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சிவகிரி, பவானி, மைலம்பாடி, பூதப்பாடி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, வெப்பிலி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இவற்றை பயன்ப டுத்தி உயர்த்த விலையில் விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பவானிசாகர் அணையில் இருந்து இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர்அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.30 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 326 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து இன்று கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி வரை தொடர்ந்து 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
- 37 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 001 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 37 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
- அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு டவுன் போலீசார் மரப்பாலம் அருகே உள்ள பழைய நடராஜா தியேட்டர் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் ஈரோடு பெரியார் வீதியை சேர்ந்த ஆனந்த் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் பணம் ரூ.3,570 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- சொத்து வரியினை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
- 5 சதவீத ஊக்கத்தொகையினை பெற்று பயன்பெறலாம்.
பவானி:
பவானி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமை யாளர்கள் தங்களது 2023- 2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதன் மூலம் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அதன் படி பவானி நகராட்சி சார்பில் சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வசூல் மையத்தில் காசோலை, வங்கி வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பவானி நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்க தொகை யினை பெற்று பயன்பெறலாம்.
இதன் மூலம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்ப டும் வளர்ச்சி திட்ட பணிகளில் தங்கள் பங்களி ப்பினை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






