என் மலர்
ஈரோடு
- சுந்தரம் எவ்வித அசைவுமின்றி படுத்திருந்தார்.
- உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் டி.ஜி.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). ஜவுளித்தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் திருச்சி தென்னூரை சேர்ந்த சுந்தரம் (80). இவர் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ரவிச்சந்திரனும், சுந்தர மும் நண்பர்கள். இதனால் ரவிச்சந்திரன் கடந்த 2016-ம் ஆண்டு சுந்தரத்தை அழைத்து வந்து ஈரோட்டில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்து ஜோதிட தொழில் செய்ய உதவி செய்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சுந்தரத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை ரவிச்சந்திரன், சுந்தரத்தை பார்ப்பதற்காக அவர் தங்கி இருந்த லாட்ஜு க்கு வந்துள்ளார்.
அப்போது கதவு உள்பக்கமாக தாழி டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரம் எவ்வித அசைவுமின்றி படுத்திருந்தார்.
இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுந்தரத்தின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
- சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஓடக்கா ட்டை சேர்ந்தவர் வெங்க டேஷ் (45). ரியல் எஸ்டேட் அதிபரான வெங்கடேஷ் விவசாயமும் செய்து வருகிறார்.
இவரது மனைவி வசந்தி. கோபி அருகே மொடச்சூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் நவீன்.
வெங்கடேஷ் அதே பகுதியில் தோட்டத்திலேயே சுற்றிலும் சுவராலும், மேற்கூரை தென்னை ஓலையால் அமைத்து அதன் மேல் தகர சீட் அமைத்து உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் தொழில் விசயமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் வெங்கடேசின் தந்தை பெருமாள், தாயார் பாவாயம்மாள் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் மதியம் திடீரென வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பெருமாளும், பாவா யம்மா ளும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர்.
அதற்குள் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அருகில் இருந்த வர்கள் தீயை அணைக்க முயன்ற போது தென்னை ஓலையால் மேற்கூரை அமைக்கப்பட்டதால் தீ மளமளவென பரவியது. இதனால் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து நம்பியூர் தீயணைப்பு த்துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ மளமள வென பரவி வீட்டில் பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 3 லட்சம் ரொக்க பணம், தோட்டத்தின் பத்திரங்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சமையல் பொருட்கள் என சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.
தீ விபத்து ஏற்பட்ட போது ஓலையால் மேற்கூரை அமைத்து அதன் மீது இரும்பு தகர சீட் போடப்பட்டு இருந்ததால் தீயை உடனடியாக அணை க்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்த போது சுவர்களும் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்க ளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
தீ விபத்தின் போது வீட்டில் இருந்த பெருமாள் மற்றும் பாவாயம்மாள் ஆகியோர் உடனடியாக வீட்டை விட்டு வெளி யேறியதால் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினர்.
இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேவர்மலை அரசு பள்ளியில் மருத்துவ ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
- மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்.சக்தி கிருஷ்ணன் வழங்கினார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாமரைக்கரை அடுத்த தேவர்மலை அரசு பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் புன்னகை திட்டத்தின் கீழ் வீடியோ காலில் நோயாளிகளிடம் பேசி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வீடியோ காலில் பேசினார்.
பர்கூர் மலைப்பகு தியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்.சக்தி கிருஷ்ணன் வழங்கினார்.
மேலும் மேல் சிகிச்சை தேவைப்படும் மலை வாழ் மக்களை அந்தியூர் அரசு மருத்துவ மனை அல்லது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது தேவர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
- கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது.
- ஏலத்தில் மொத்தம் ரூ.14 லட்சத்து 71 ஆயிரத்து 290-க்கு விற்பனை நடைபெற்றது.
ஈரோடு:
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் விற்பனை செய்ய சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 மூட்டைகள் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, முதல் தரம் ஒரே விலையாக ரூ.25.55-க்கும், 2-ம் தரம் குறைந்த பட்ச விலையாக ரூ.24.70-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.24.80-க்கும் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 60 கிலோ எடையிலான 501 மூட்டைகள் நாட்டுச்ச ர்க்கரை ரூ.12 லட்சத்து 49 ஆயிரத்து 990-க்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்காக கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த ஏலத்தில் பங்கேற்ற இதர வியாபாரிகள் 5,400 கிலோ எடையிலான 90 மூட்டைகள் நாட்டுச்சர்க்க ரையை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300-க்கு கொள்முதல் செய்தனர்.
ஏலத்தில் மொத்தம் ரூ.14 லட்சத்து 71 ஆயிரத்து 290-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்கா ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.
- அந்தியூர் பகுதிகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தவிட்டுப்பாளையம், பச்சாம்பாளையம்,மூலக்கடை, பிரம்மதேசம் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மது பிரியர்கள் பீர் குடிப்பதில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றார்கள்.
இதனால் அந்தியூர் பகுதிகளில் செயல்படும் கடைகளில் பீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மது பிரியர்கள் 160 ரூபாய் விலைக்கு விற்க கூடிய பீர் பாட்டிலை 220 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு தெரி விக்கின்றார்கள்.
மேலும் தினமும் நாங்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றோம்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது உடம்பிற்கு உஷ்ணத்தை போக்கும் வகையில் பீர்குடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி நாங்கள் பீர் வாங்க டாஸ்மார்க் கடைக்கு சென்றால் அங்கு தற்போது இருப்பு இல்லை என்று கூறி விடுகின்றார்கள்.
இதனால் வெளியிடங்களில் விற்கப்படும் பீர் பாட்டிலை அதிக விலை கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தற்போது வெயில் காலம் முடியும் வரை பீர் பாட்டில் அதிக அளவில் டாஸ்மாக்கடை களுக்கு இறக்குமதி செய்து கூலித்தொழி லாளர்களின் வருமானத்திற்கு ஏற்றார் போல் டாஸ்மாக் கடைகளிலேயே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மது பிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.
சென்னிமலை:
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வானில் கருமேகம் திரண்டன. பின்னர் 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது.
சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.
சென்னிமலை பகுதியில் பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பல இடங்களில் ரோட்டோர மரங்கள் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. சென்னிமலை பகுதியில் நேற்று 10 மி.மீ. மழை பெய்தது.
- வீட்டில் பணம்,நகை திருடி சென்றது தெரியவந்தது.
- போலீசார் 2 பேரை கைது செய்து நகையை மீட்டனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பெத்தாம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (42). இவர் குன்னத்தூர் ரோட்டில் சொந்தமாக எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ரேணுகா தேவி. இவர் தினமும் காலை 10 மணியளவில் தனது கணவருக்கு உதவியாக கடைக்கு செல்வார். மீண்டும் அவர்கள் 2 பேரும் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வார்கள்.
இதே போல் கடந்த மாதம் 7-ந் தேதி ரேணுகாதேவி வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். பின்னர்மீண்டும் அவர் தனது கணவருடன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.
அப்போது அவர் சாவி வைத்திருந்த இடத்தில் சாவியை காணவில்லை. ஆனால் வீடு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ லாக்கரில் இருந்த 7. 25 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்க ப்பணம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் பெருந்து றை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனிப்படை போலீசார் விஜயமங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சையதர் அலி (37), அவரது மனைவி கற்பகம் (33) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் தான் எலக்ட்ரிக் கடை அதிபர் கவுரிசங்கர் வீட்டில் பணம்,நகை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:
சையதர் அலி மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகியோர் தனியாக இருக்கும் வீடு மற்றும் கடைகளை நோட்டமிட்டு பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் இவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
சம்பவத்தன்று பெருந்துறை பகுதிக்கு வந்த இவர்கள் கவுரிசங்கர் வீட்டை நோட்டமிட்டு அவரது மனைவி சாவி வைத்து செல்வதை கண்காணித்து உள்ளனர்.
பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் சாவியை திறந்து வீட்டிற்குள் சென்று நகை, மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் திருடிய பணத்தில் வீட்டிற்கு தேவையான டி.வி.,பிரிட்ஜ், இருசக்கர வாகனங்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம்இருந்து 4அரை பவுன் நகையை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
- விதை சட்ட விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம், தனியார் ரக உண்மை நிலை விதைக ளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலை, உற்பத்தி யாளரிடம் பெற்று ஆய்வி ன்போது காண்பிக்க வேண்டும்.
புதிய ரகங்கள் இந்த பருவத்துக்கு ஏற்றவைதானா என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்க வேண்டும்.
பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிர் வருதல், கதிர் வராமல் இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது விதை விற்பனை தடை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை, கொள்முதல் பட்டியல், பதிவு சான்று, விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். விதை சட்ட விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் ஏ.டி.எம். கார்டு பெறலாம்.
- வாடிக்கையாளர்களின் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும்.
ஈரோடு:
ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி ப்பாளர் கருணா கரபாபு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசு சார்பில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொ டரில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளது.
இதன்படி பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புதிய 2 ஆண்டு சேமிப்பு திட்டம் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் அறிமுகம் செய்துள்ளது.
மாதாந்திர வட்டி திட்டமான எம்.ஐ.எஸ். கணக்கின் முதலீட்டு தொகைக்கான உச்சவரம்பு தனி நபருக்கு 9 லட்சம் ரூபாயாகவும், கூட்டு கணக்குக்கு 15 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களு க்கான சேமிப்பு திட்டத்து க்கான முதலீட்டு தொகை உச்ச வரம்பானது 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாக இருந்த அஞ்சல் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகத்தில் 500 ரூபாய் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் ஏ.டி.எம். கார்டு பெறலாம். காசோலை புத்தகம், இணைய வங்கி சேவை, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி 7.5 சதவீதமாக உயர்ந்ததால் வாடிக்கையாளர்களின் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும். மூத்த குடிமக்களின் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு காலாண்டு வட்டியாக 2,050 ரூபாயாக கிடைக்கும்.
பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆண் குழந்தைகள் உட்பட அனைவருக்குமான பொன்மகன் பொது வருங்கால வைப்பு கணக்குகளை தொடங்கி நெடுங்கால சேமிப்பை செயல்படுத்த லாம்.
கூடுதல் விபரத்துக்கு அருகே உள்ள அஞ்சலகங்களையும், அந்தந்த பகுதி தபால்காரரையும் அணுகலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி முன்பு தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ராக்கிமுத்து, செயலாளர் விஜய மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பு.புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியும், அதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- சிறப்பு வகுப்புக்கு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி கிராமம் மூலகவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (17).
கவியரசு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 11-ம் வகுப்புக்காக அவரை அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ்-1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உன்னை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.
இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரெயில் ஏறி சென்னை சென்று விட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டு வந்தனர்.
அதன் பின்னர் பிளஸ்-1 பொதுத்தேர்வை கவியரசு எழுதி முடித்தார். அதன் பின்னர் பிளஸ்-2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று வழக்கம் போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி விட்டனர்.
இதனையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு முனிசிபல் காலனி 3-வது கிராஸ் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் தாமோதரன் (57). ஈரோடு என்.எம்.எஸ். காம்பவுண்டில் உள்ள டெக்ஸ்டைல்சில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற தாமோதரன் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த கம்மல் தோடு, மோதிரம் என முக்கால் பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு போய் இருந்தது.
இது குறித்து தாமோதரன் அளித்த புகாரின் பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் திருட்டு நடந்த வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர்.
குடியிருப்பு பகுதியில் பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் வீரப்பன்சத்தி ரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்னமுத்து வீதியி ல் அடுத்தடுத்த சந்துகளில் உள்ள 2 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது.
ஒரு வீட்டில் வெள்ளி குத்துவிளக்கும், வெள்ளி கொலுசும் திருட்டு போயிருந்தது. மற்றொரு வீட்டில் ரூ.1 லட்சம் ரொக்க பணம் திருட்டு போயிருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ஒரு நபர் நடந்து செல்வதும், திருட்டு நடந்த வீட்டில் இருந்து செல்வதும் பதிவாகி இருந்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 3 திருட்டிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






