என் மலர்
நீங்கள் தேடியது "thunder and lightning in"
- இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.
சென்னிமலை:
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வானில் கருமேகம் திரண்டன. பின்னர் 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது.
சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.
சென்னிமலை பகுதியில் பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பல இடங்களில் ரோட்டோர மரங்கள் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. சென்னிமலை பகுதியில் நேற்று 10 மி.மீ. மழை பெய்தது.






