என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடியோ காலில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
தேவர்மலை அரசு பள்ளியில் வீடியோ காலில் மருத்துவ ஆலோசனை
- தேவர்மலை அரசு பள்ளியில் மருத்துவ ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
- மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்.சக்தி கிருஷ்ணன் வழங்கினார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாமரைக்கரை அடுத்த தேவர்மலை அரசு பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் புன்னகை திட்டத்தின் கீழ் வீடியோ காலில் நோயாளிகளிடம் பேசி ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் வீடியோ காலில் பேசினார்.
பர்கூர் மலைப்பகு தியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை டாக்டர்.சக்தி கிருஷ்ணன் வழங்கினார்.
மேலும் மேல் சிகிச்சை தேவைப்படும் மலை வாழ் மக்களை அந்தியூர் அரசு மருத்துவ மனை அல்லது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் போது தேவர்மலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
Next Story