என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற்றது
    • அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அந்தியூர்,

    நவகிரகங்களில் ஒன்றான குரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடை பெற்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னி ட்டு, சிறப்பு குரு பெயர்ச்சி ஹோமங்கள் மங்களகர அபிஷேக, ஆராதனைகள், தீபாரா தனை மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்ப ட்டன.

    இதில் அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் விடப்படும் படகு இல்லம்,பிற வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது
    • படகு இல்லம் அந்தியூர் பகுதிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வெள்ளித்திருப்பூர் சாலையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் வரட்டு பள்ளம் அணை நிரம்பி, கெட்டி சமுத்திரம் ஏரி அடுத்து பெரிய ஏரி வழியாக சந்திப்பாளையம் ஏரி வேம்புத்தி ஏரி ,ஆப்பக்கூடல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் .இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

    மேலும் இந்த ஏரிகளில் மீன்கள் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு குழந்தைகளை விடுமுறை நாட்களில் வெளியில் அழைத்துச் சென்று பொழுதுபோக்காக கண்டுகளிக்க இடம் இன்றி தவித்து வந்த நிலையில் வரட்டு பள்ளம் அணையின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வனத்துறையி னாலும், பொதுப் பணி துறையாலும் முன் பகுதியில் கேட்டுகள் அமைத்து உள்ளே பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதித்து முன் பகுதி கேட்டு பூட்டப்பட்டு உள்ளது.

    இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அரசு விடுமுறை நாட்களிலும் குடும்பத்துடன் சென்று பொழுதை கழிக்க இடம் இன்றி தவித்து வந்த மக்களுக்கு அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் விடப்படும் படகு இல்லம்,பிற வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது .இதனை மிகுந்த வரவேற்பினை பொதுமக்கள் மத்தியில் பெற்றுள்ளது.

    இதுப்பற்றி அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் இதுவரை விடுமுறை நாட்களில் குழந்தைக ளுடன் பொழுதை கழிப்பதற்கு கொடிவேரி அணை, பவானிசாகர் அணை ,வெள்ளோடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று விடுமுறையை கழித்து வந்தோம். இந்த நிலையில் இந்தப் படகு இல்லம் அந்தியூர் பகுதிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகவும் ஐந்து ஏரிகள் இருந்தும் அந்தியூர் பகுதியில் படகு இல்லம் இல்லை என்று நினைத்திருந்த எங்களுக்கு கனவை நினைவாக்கி கொடுத்துள்ளார்கள். அதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் , அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாஜ லத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றோம். மேலும் இந்த படகு இல்லம் விரைவில் தொடங்கி பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து குதூகளித்தனர்.
    • பவானிசாகர் பஸ் நிலையம் மற்றும் பூங்கா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் காரணமாக கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 2 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கொடிவேரி அணைக்கு நேற்று முன் தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்களான சேலம், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

    இதே போல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் கட்டுகடங்காமல் அலைமோதியது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து குதூகளித்தனர். இதனால் நேற்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. கொடிவேரி அணையில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பொதுமக்களின் கூட்டம் இருந்தது.

    இதையொட்டி ஈரோடு, சத்தியமங்கலம் ரோடு கொடிவேரிக்கு செல்லும் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றன.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    இதனால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 19 ஆயிரம் பேர் கடந்த 2 நாட்களில் மட்டும் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ. 95 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொடிவேரி அணை வரலாற்றிலேயே நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தது இதுவே முதன் முறை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் பவானிசாருக்கு வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து குடும்பத்துடன் வந்த மக்கள் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பலர் படகு சவாரி செய்து தண்ணீர் அழகை ரசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பஸ் நிலையம் மற்றும் பூங்கா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.
    • ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் கால்நடை சந்தை கூடியது.

    ஈரோடு, அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, அத்தாணி, சென்னம்பட்டி, பர்கூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாடுகள், எருமை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், எருமை மாடுகள் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 53 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

    சுமார் 2,500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்பட்டு ரூ.90 லட்சத்துக்கு வர்த்தகம் செய்யப்பட்டதாக கால்நடை வியாபாரிகள் கூறினர்.

    • கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள மறவன் குட்டை பகுதியில் சாலையோரம் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருப்பதாகவும்,

    அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வெங்கடாஜலபதி மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், நில வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு கிணற்றில் சாக்கு மூட்டை மிதந்து கொண்டிருந்தது. மேலும் அந்த மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    யாரையோ கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி வீசி சென்றதாகவும் தகவல் பரவியது.

    இதையடுத்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த அந்த மூட்டையை மேலே எடுத்து கொண்டு வந்தனர்.

    பின்னர் அந்த மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் இறந்த நாயின் உடல் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நாயை அங்கேயே அருகில் குழி தோண்டி புதைத்தனர்.

    இதனால் போலீசார் நிம்மதி அடைந்த னர். போலீசாரின் விசார ணையில் இறந்த நாயை யாரோ சிலர் மூட்டை கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பணம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி பெரிய தாயி (60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இருவரு க்கும் திருமணம் ஆகிவிட்டது. கணவர் முத்து ஏற்கனவே இறந்து விட்டார். பெரிய தாயி வீட்டின் அருகிலேயே டிபன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.

    பெரியதாயின் 2-வது மகள் அம்பிகா, மருமகன் கருணாகரன் 2 பேரும் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் அம்பிகாவின் 3 குழந்தைகளுடன், பெரிய தாய் பஞ்சலிங்க புரத்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று பெரியதாயி தனது 3 பேரக் குழந்தை களுடன் சின்னம்மாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு அங்கேயே தங்கி விட்டனர்.

    பின்னர் காலை பஞ்சலிங்க புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் பணம் ரூ.24 ஆயிரம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி மின் கோட்டத்துக்கு உட்பட்ட தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (24-ந் தேதி) நடக்கிறது.

    இதனால் சுக்கா நாயக்கனூர், சின்னா நாயக்கனூர், காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகாடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி,

    ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரிய மேட்டூர், சின்னமேட்டூர், நல்லா நாயக்கனூர், காடையாம்பட்டி, எலவமலை, லட்சுமி நகர், தளவாய்பேட்டை, ஜம்பை,

    பருவாச்சி, வடமலைப்பாளையம், பாலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என பவானி மின் கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • டீ கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
    • தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு மருத்துவ மனை போலீஸ் நிலைய போலீசார் நசியனூர் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள டீ கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இருப்பினும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

    விசாரணையில் அங்கு கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டிருந்தது ஈரோடு, மரப்பாலம் பகுதியை சேர்ந்த கர்ணன் (30), கைகாட்டி வலசு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் 71 மற்றும் எண்கள் எழுதப்ப ட்டிருந்த வெள்ளைத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஏலத்துக்கு மொத்தம் 2,583 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    ஈரோடு:

    பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாரந்தோ றும் சனி மற்றும் புதன்கி ழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று நடை பெற்ற ஏலத்துக்கு மொத்தம் 2,583 மூட்டைகள் கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரக்கொ ப்பரை 1,177 மூட்டைகள் வர பெற்றிருந்தன.

    சல்பர் இல்லாத கொப்பரைகள் குறைந்தபட்சமாக கிலோ ரூ.82.18-க்கும், அதிகபட்சமாக ரூ. 85.60-க்கும் விற்பனையாகின. சல்பருடனான முதல் தர கொப்பரைகள் குறைந்த பட்ச விலையாக கிலோ ரூ.77.20-க்கும், அதிக பட்சமாக ரூ.86.33-க்கும் விற்பனையாகின.

    2-ம் தர கொப்பரைகள் 1,406 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.50.50-க்கும், அதிகபட்சமாக ரூ. 82.61-க்கும் விற்ப னையாகின.

    மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 400 கிலோ கொப்பரைகள் விற்பனையாகின. இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.98 லட்சத்து 30 ஆயிரம் ஆகும் என விற்பனை கூடக்கண்கா ணிப்பாளர் தெரிவித்து ள்ளார்.

    • வேம்பத்தி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது.
    • பிணமாக கிடப்பது தேவேந்திரன் என தெரிந்தது.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி மலைக்கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 45). விவசாயம் செய்து வந்தார்.

    இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் சில நேரங்களில் கீழே விழுந்து கிடப்பார் எனவும் கூறப்ப டுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவேந்திரன் வழக்கம் போல் ேவலைக்கு சென்றார். இதையடுத்து அவரது மனைவி கலாமணி அவருக்கு உணவு கொடுத்து விட்டு வந்தார்.

    இரவு நீண்ட நேரமாகியும் தேவே ந்திரன் வீட்டுக்கு வர வில்லை. இதை தொடர்ந்து நேற்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

    இதையடுத்து அவரது மனைவி கலாமணி மற்றும் அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் கலாமணி அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடப்பது அவரது கணவர் தேவேந்திரன் என தெரிந்தது.

    இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

    இதை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் தேவேந்தி ரன் வேம்பத்தி ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து அத்தாணி தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து அத்தாணி தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது மாலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதை 10-வது வளைவு அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது லாரி பாறையில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    இதில் லாரியில் இருந்த கரும்புகள் அனைத்தும் சாலையில் சிதறியது. இதனால் வாகனங்கள் ஏதும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் அணி வகுத்து நின்றன. பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சாலையில் கிடந்த கரும்புகளை சாலை ஓரத்தில் அகற்றினர்.

    பின்னர் இரவு 7 மணியளவில் கரும்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்ல தொடங்கின. இருந்தபோதும் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வாக்கால் தண்ணீரில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டனர்.

     சத்தியமங்கலம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்த வர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூரில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு வந்தனர்.

    இதையடுத்து ராக்கி முத்து, சிவக்குமார் ஆகி யோர் வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் எதிர்பாராத விதமாக வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

    இதை கண்ட கரையில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.

    இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்துவை பிணமாக மீட்டனர்.

    ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணை ப்பு வீரர்கள் தீவிர மாக தேடி வந்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் ஏரங்காட்டூர் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவக்குமாரை 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று இரவு வரை சிவக்குமார் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 3-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாக்கால் தண்ணீரில் இறங்கி சிவக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ெதாடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இன்று காலை வாய்க்கால் புதூர் கீழ்பவானி வாய்க்காலில் தேடி கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் குளித்த இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானிசாகர் அடுத்த வாய்க்கால் புதூர் ஒற்றை பாலம் என்ற பகுதியில் சிவக்குமார் உடல் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டனர். இதையடுத்து சிவகுமார் உடல் ஆம்புலன்சு மூலம் சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×