என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி தேஜா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மவுலீஸ்வரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பள்ளிபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (26). இந்த தம்பதிக்கு மவுலீஸ்வரி (6), தேஜா ஸ்ரீ (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். மவுலீஸ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அக்காள்-தங்கை இருவரும் தங்களது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளில் பெயிண்டு பாட்டில் ஒன்று இருந்தது.

    அதனை குளிர்பானம் என நினைத்து, சிறுமிகளான மவுலீஸ்வரி, தேஜா ஸ்ரீ ஆகியோர் அடுத்தடுத்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை பார்த்து பதறி போன பெற்றோர், சிறுமிகளை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி தேஜா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். மவுலீஸ்வரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பெயிண்டை குடித்து பலியான தேஜா ஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர்வழி பாதையில் வனவிலங்குகள் ஆங்காங்கே நிற்கின்ற நீரினை பருகி தாகம் தீர்த்து வருகிறது.
    • ஒற்றை யானை ஒன்று மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மேற்கு மலைப் பகுதியில் அமைந்துள்ளது மணியாச்சி பள்ளம் நீர் ஓடை. இந்த ஓடையில் மழைக்காலங்களில் பெய்யக்கூடிய மழை நீரானது பாலாற்றின் வழியாக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

    இந்த நீர்வழி பாதையில் வனவிலங்குகள் ஆங்காங்கே நிற்கின்ற நீரினை பருகி தாகம் தீர்த்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் செல்வது குறைந்தது.

    இருப்பினும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வனவிலங்குகள் குடித்து தாகம் தணித்து வருகின்றது. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று மணியாச்சி பள்ளம் நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது.

    பின்னர் தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது அந்த பகுதியில் உள்ள பாலத்தில் சென்ற சிலர் செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்துக் கொண்டும் சென்றார்கள்.

    கோடை காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் அவ்வப்போது சாலைகளில் நிற்பது அதிகரித்து உள்ளது. எனவே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் செல்போனில் படம் எடுப்பது, செல்பி எடுப்பது ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துவிடும்.

    எனவே இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • காசி தமிழ் சங்கம விழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
    • தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது.

    ஈரோடு :

    ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று ஈரோடு வந்த அவர் குமலன்குட்டை பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, அரிசி, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்றும், பொருட்களின் தரம் குறித்தும், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக ஈரோடு வில்லசரம்பட்டியில் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளால், பிரதமர் மோடி தலைமையில் மக்கள் மாற்றத்தை காண விரும்புகின்றனர்.

    தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து மத்திய அரசின் திட்டங்களையும், தங்களது திட்டங்களாக தமிழக அரசு கூறி வருகிறது. எனவே பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மக்களை அணுகி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெரிவித்து வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பேசும்போது, தமிழ் மொழி, கலாசாரம், தமிழ் புலவர்கள் போன்றவை குறித்து பெருமையாக குறிப்பிட்டு வருகிறார்.

    சமீபத்தில் காசி தமிழ் சங்கம விழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தமிழக மக்களை காசிக்கு அழைத்து சென்று கலாசார பறிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

    தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறது. ஆனால் தி.மு.க. அரசும், அதன் அமைச்சர்களும், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், பா.ஜனதாவுக்கு எதிராகவும் பொய்யான பிரசாரத்தை செய்து வருகின்றனர். விரைவில் இதற்கு முடிவு கட்டி, மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள 84 கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மத்திய அரசு 5 கிலோ இலவச அரிசி வழங்குகிறது. ஆனால், ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படமோ, மத்திய அரசின் சின்னமோ இடம்பெறுவதில்லை. வருகிற 2024-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேலான தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு மத்திய மந்திரி கிஷன் ரெட்டி கூறினார்.

    • தென்னை பட்டை எடுத்தபோது அதிலி ரு ந்த தேன் பூச்சிகள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மா சையை கடித்து விட்டது
    • இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை: 

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளோடு கவுண்டச்சி பாளையம் மாகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அம்மாசை (83). இவரது கணவர் குழந்தைசாமி.

    இவர்களது மகள் ஆனந்தாயி. சம்பத் அன்று காலை அம்மாசை தனது மகளுடன் அதைப் பகுதியில் உள்ள புளிய மரத்து தோப்பு தோட்டத்திற்கு தென்னை பட்டை எடுப்பதற்காக சென்றார்.

    தென்னை பட்டை எடுத்தபோது அதிலி ரு ந்த தேன் பூச்சிகள் எதிர்பாராத விதமாக மூதாட்டி அம்மா சையை கடித்து விட்டது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த மூதாட்டி அம்மாசை சிகிச்சை பலன் இன்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 25 நாள்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோ னா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட த்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ள்ளவர்க ளின் எண்ணிக்கை 1 லட்ச த்து 36 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 5 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து நேற்று வீடு திரும்பி னர்.மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 013 பேர் கொரோனா பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா பாதிக்கப்ப ட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் வரை மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்க ப்பட்ட வர்களின் எண்ணிக்கை 46ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 50ஐ எட்டியது.

    நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    • ஈரோட்டில் மட்டுமே 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது.
    • இப்போ தே 106 டிகிரி வெயில் கொளுத்தும் நிலை யில், எதிர் வரும் கத்திரி வெயிலை எதிர்கொள்வது எப்படி என மக்கள் கடும் அச்சத்து க்குள்ளாகியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் தொடர்ந்து 100 டிகிரி வெயில் கொளு த்துவதால் பொது மக்கள் கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயி லின் தாக்கம் தொட ர்ந்து 100 டிகிரிக்கு அதிக மாகவே பதிவாகி வருகிறது.

    ஈரோட்டில் மட்டுமே 106 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது.

    காலை 7 மணிக்கெல்லாம் வீசத் தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 7 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கும் மேலாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர்.

    மதிய நேரத்தில், நகரின் பிரதான சாலைகள் வெறி ச்சோடியே காணப்படு கின்றன. வீடுகள், அலுவ லகங்களில் மின்விசிறி இய ங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல்காற்றே வீசுகிறது.

    இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதிலிருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.

    கரும்பு பால், மோர், இளநீர், தர்பூசணி, முலா ம்பழம், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான பொருட்களின் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

    ஈரோட்டில் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து 104 டிகிரிக்கு மேலாகவே வெயில் பதிவாகி வந்த நிலையில், நேற்று 106 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

    ஏப்ரல் மாதம் தொடங்கி யது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கவுள்ளது.

    இப்போ தே 106 டிகிரி வெயில் கொளுத்தும் நிலை யில், எதிர் வரும் கத்திரி வெயி லை எதிர்கொள்வது எப்படி என மக்கள் கடும் அச்சத்து க்கு ள்ளாகியு ள்ளனர்.

    • உடலை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் முகமது ரிஸ்வான் (20). இவர் காங்கயத்தில் உள்ள கார்மெண்ட்ஸ்சில் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஜுபைர் (22). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இருவரும் நண்பர்கள். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்காக முகமது ஜுபைர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை தங்களது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த முகமது தமிமுன் அன்சாரி (23), அபூபக்கர்சித்திக், முகமது ரிஸ்வான் ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடினர்.

    இதனையடுத்து நண்பர்கள் 5 பேரும் நேற்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக நீர்நிலைகளில் குளிக்கலாம் என முடிவு செய்தனர். அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் அருகே உள்ள பெத்தாம்பாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றனர்.

    தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்தி ற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக சென்று கொண்டிருந்தது. இது தெரியாமல் விளையாட்டு மிகுதியால் முகமது ரிஸ்வான், முகமது ஜுபைர் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் இருவரும் தண்ணீரில் மூழ்கத் தொடங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் 3 பேரும் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். பின்னர் சிறிது நேரத்திலேயே இருவரும் நீரில் மூழ்கினர்.

    இது குறித்து காஞ்சி கோவில் போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மீனவர்கள் உதவியுடன் கீழ்பவானி வாய்க்காலில் தேடிப் பார்த்தனர். பின்னர் இரவு நேரம் ஆனதால் தற்காலிகமாக தேடும் பணியை அவர்கள் நிறுத்தினர்.

    அதன் பின்பு இன்று காலை தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் தேடினர். அப்போது இன்று காலை முகமது ரிஸ்வான் மற்றும் முகமது ஜுபைர் உடல் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டது. அதன்பின் அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து நண்பர்கள், உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த காளிங்க ராயன் பாளையம், கவுந்த ப்பாடி ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் அன்னை பவானி (64). மகளுடன் வசித்து வருகிறார்.

    மகள் வீட்டின் மேல் தளத்திலும் அன்னை பவானி கீழ்த ளத்தில் வசித்து வந்தார். அன்னை பவானியின் கணவர் பூபதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் புகைப்படத்திற்கு தினமும் அன்னைபவானி விளக்கேற்றி பூ வைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்றும் வழக்கம் போல் காலை அன்னை பவானி கணவரின் புகைப்படத்திற்கு விளக்கு ஏற்றி பூ வைத்து வழிபட்டார்.

    விளக்கேற்றி விட்டு பூ போட்டு கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. வேதனையால் அன்னை பவானி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஊற்றி தீயை அனைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அன்னை பவானி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
    • 3,200 வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஒரு கிலோ கதலி 25 ரூபாய்க்கும், நேந்திரம் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்ப ட்டது.

    இதேபோல் பூவன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் செவ்வாழை தார் ஒன்று 600 ரூபாய்க்கும் தேன் வாழை தார் ஒன்று 550 ரூபாய்க்கும் மொந்தன் தார் ஒன்று 320 ரூபாய்க்கும் ரொபஸ்டோ தார் ஒன்று 350 ரூபாய்க்கும் ரஸ்தாலி தார் ஒன்று 450 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்தம் 3,200 வாழைத்தார் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    • பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
    • இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவரது மனைவி கவுதமி (22). இருவரும் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் குறித்து மணி கண்டன் தனது பெற்றோ ருக்கு தெரிவிக்கவில்லை யாம்.

    தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில், தங்களது திருமணம் குறித்து மணி கண்டனின் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கெளதமி கூறியுள்ளார்.

    இதையடுத்து மணி கண்டன், முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் வசித்து வரும் தனது சகோதரி பவித்ராவிடம் தங்களது திருமணம் குறித்து தெரி வித்துள்ளார்.

    இதையடுத்து பவித்ரா, இருவரையும் தங்களது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அதன்பேரில், மணி கண்டனும் கவுதமியும், பெருந்துறையில் உள்ள பவித்ராவின் வீட்டுக்கு நேற்று வந்துள்ளனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தங்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பவித்ரா கேட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த கவுதமி பவித்ராவின் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டுக் கொண்டுள்ளார்.

    வெகு நேரமாகியும் கவுதமி வெளியில் வராத தால் குளியல் அறை கதவை உடைத்து பார்த்தனர்.

    அங்கு தூக்கில் தொங்கிய கவுதமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், கவுதமி ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்து, கவுதமியின் சகோதரர் செல்லதுரை அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும், இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளேயாவதால் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். 

    • நேற்று மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதி பட்டுவந்தனர்.
    • மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலைகிரா மங்க ளுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பா தை ஆசனூர் ,கேர்மாளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதி பட்டுவந்தனர்.

    மலைகிராமமான ஆசனூர், அரேபாளையம் ,குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி,காடட்டி,சுஜில்கரை,திங்களூர்,கோட்டமாளம், மாவள்ளம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிரா மங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டுவந்தனர். தொடர்ந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை இதே போல் மின் கம்பி துண்டிக்கபட்டு விடுகிறது.

    மின்பழுதை சரி செய்ய போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் 1 நாள் அல்லது இரண்டு நாள் கழித்துதான் மின்பழுது சரி செய்யபடுகிறது. இதே நிலைமை கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலைகிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனால் குடிநீர் இல்லாமலும் பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிபட்டுவருகின்றனர்.

    சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமை யானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.

    எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னிமலை டவுன் மற்றும் கிராமங்களில் இரவில் திடீரென மழை பெய்தது
    • ஆயிரக்க ணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது. வெட்டக்கூடிய நிலையில் இருந்த சிலரக வாழைத்தா ர்கள் இதில் அதிகளவில் சேதமானது

    சென்னிமலை,

    சென்னிமலை சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் பகலில் கடுமையான வெயில் அடித்தது. சென்னிமலை டவுன் மற்றும் கிராமங்களில் இரவில் திடீரென மழை பெய்தது.

    சிறிது நேரத்தில் சூறாவளிக்காற்றும் சேர்ந்து அடித்தது. சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கிராமப் புறத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் சிலரது தோட்டங்களில் பல ஏக்கரில் இருந்த ஆயிரக்க ணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது. வெட்டக்கூடிய நிலையில் இருந்த சிலரக வாழைத்தா ர்கள் இதில் அதிகளவில் சேதமானது.

    இதனால் பல லட்சக்க ணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழைத் தார்கள் சேதமானதால் அரசு நஷ்ட ஈடு தரவே ண்டும் என பாதி க்கப்பட்ட விவசா யிகள் கோரிக்கை வைத்து ள்ளனர். மேலும், சில கிராமங்களில் சூறாவளி க்காற்றில் மற்ற சில மரங்க ளும் வேரோடு சாய்ந்து சேதமானது.

    ×