கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு

நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50ஆக உயர்வு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 25 நாள்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோ னா பாதிப்பு பதிவாகி வருகிறது.

நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட த்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ள்ளவர்க ளின் எண்ணிக்கை 1 லட்ச த்து 36 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 5 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து நேற்று வீடு திரும்பி னர்.மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 013 பேர் கொரோனா பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா பாதிக்கப்ப ட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் வரை மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்க ப்பட்ட வர்களின் எண்ணிக்கை 46ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 50ஐ எட்டியது.

நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com