என் மலர்
உள்ளூர் செய்திகள்

இருளில் மூழ்கிய 50 மலைகிராமங்கள்
- நேற்று மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதி பட்டுவந்தனர்.
- மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலைகிரா மங்க ளுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைப்பா தை ஆசனூர் ,கேர்மாளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 50 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் அவதி பட்டுவந்தனர்.
மலைகிராமமான ஆசனூர், அரேபாளையம் ,குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி,காடட்டி,சுஜில்கரை,திங்களூர்,கோட்டமாளம், மாவள்ளம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிரா மங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.
மின்தடையால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டுவந்தனர். தொடர்ந்து வாரத்தில் 2 அல்லது 3 முறை இதே போல் மின் கம்பி துண்டிக்கபட்டு விடுகிறது.
மின்பழுதை சரி செய்ய போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் 1 நாள் அல்லது இரண்டு நாள் கழித்துதான் மின்பழுது சரி செய்யபடுகிறது. இதே நிலைமை கடந்த 1 வருடமாக நீடிப்பதாக மலைகிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனால் குடிநீர் இல்லாமலும் பள்ளி மாணவ- மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிபட்டுவருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமை யானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர்.
எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






