search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் விடுமுறை- கொடிவேரி அணையில் 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்
    X

    தொடர் விடுமுறை- கொடிவேரி அணையில் 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து குதூகளித்தனர்.
    • பவானிசாகர் பஸ் நிலையம் மற்றும் பூங்கா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் காரணமாக கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 2 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கொடிவேரி அணைக்கு நேற்று முன் தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்களான சேலம், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

    இதே போல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் கட்டுகடங்காமல் அலைமோதியது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து குதூகளித்தனர். இதனால் நேற்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. கொடிவேரி அணையில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பொதுமக்களின் கூட்டம் இருந்தது.

    இதையொட்டி ஈரோடு, சத்தியமங்கலம் ரோடு கொடிவேரிக்கு செல்லும் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றன.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    இதனால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 19 ஆயிரம் பேர் கடந்த 2 நாட்களில் மட்டும் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ. 95 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொடிவேரி அணை வரலாற்றிலேயே நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தது இதுவே முதன் முறை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் பவானிசாருக்கு வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து குடும்பத்துடன் வந்த மக்கள் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பலர் படகு சவாரி செய்து தண்ணீர் அழகை ரசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பஸ் நிலையம் மற்றும் பூங்கா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×