ஏரியில் மீன் பிடித்த போது தவறி விழுந்து விவசாயி பலி

வேம்பத்தி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது.பிணமாக கிடப்பது தேவேந்திரன் என தெரிந்தது.
ஏரியில் மீன் பிடித்த போது தவறி விழுந்து விவசாயி பலி
Published on

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி மலைக்கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 45). விவசாயம் செய்து வந்தார்.

இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் சில நேரங்களில் கீழே விழுந்து கிடப்பார் எனவும் கூறப்ப டுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவேந்திரன் வழக்கம் போல் ேவலைக்கு சென்றார். இதையடுத்து அவரது மனைவி கலாமணி அவருக்கு உணவு கொடுத்து விட்டு வந்தார்.

இரவு நீண்ட நேரமாகியும் தேவே ந்திரன் வீட்டுக்கு வர வில்லை. இதை தொடர்ந்து நேற்றும் அவர் வீட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து அவரது மனைவி கலாமணி மற்றும் அவரது உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் கலாமணி அங்கு சென்று பார்த்தார். அப்போது பிணமாக கிடப்பது அவரது கணவர் தேவேந்திரன் என தெரிந்தது.

இது குறித்து போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் தேவேந்தி ரன் வேம்பத்தி ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com