தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது

டீ கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு அரசு மருத்துவ மனை போலீஸ் நிலைய போலீசார் நசியனூர் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள டீ கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கிருந்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இருப்பினும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில் அங்கு கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்டிருந்தது ஈரோடு, மரப்பாலம் பகுதியை சேர்ந்த கர்ணன் (30), கைகாட்டி வலசு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் 71 மற்றும் எண்கள் எழுதப்ப ட்டிருந்த வெள்ளைத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தப்பியோடிய பாலசுப்பிரமணியம் என்பவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com