search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction of Natutcharkari"

    • கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் மொத்தம் ரூ.14 லட்சத்து 71 ஆயிரத்து 290-க்கு விற்பனை நடைபெற்றது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் விற்பனை செய்ய சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 மூட்டைகள் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, முதல் தரம் ஒரே விலையாக ரூ.25.55-க்கும், 2-ம் தரம் குறைந்த பட்ச விலையாக ரூ.24.70-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.24.80-க்கும் ஏலம் போனது.

    இந்த ஏலத்தில் மொத்தம் 30 ஆயிரத்து 60 கிலோ எடையிலான 501 மூட்டைகள் நாட்டுச்ச ர்க்கரை ரூ.12 லட்சத்து 49 ஆயிரத்து 990-க்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்காக கொள்முதல் செய்யப்பட்டது.

    இந்த ஏலத்தில் பங்கேற்ற இதர வியாபாரிகள் 5,400 கிலோ எடையிலான 90 மூட்டைகள் நாட்டுச்சர்க்க ரையை ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300-க்கு கொள்முதல் செய்தனர்.

    ஏலத்தில் மொத்தம் ரூ.14 லட்சத்து 71 ஆயிரத்து 290-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்கா ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ×