கஞ்சா விற்ற வாலிபர் கைது

வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு டவுன் போலீசார் மரப்பாலம் அருகே உள்ள பழைய நடராஜா தியேட்டர் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் ஈரோடு பெரியார் வீதியை சேர்ந்த ஆனந்த் (23) என்பதும், கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா மற்றும் பணம் ரூ.3,570 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com