search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2.40 லட்சம் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்து சாதனை
    X

    2.40 லட்சம் டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்து சாதனை

    • ரூ.1.11 கோடி விவசாயிகள், வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.
    • இநாம் தொடங்கி 35,300 டன் விளை பொருட்கள் விற்பனை செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றையின் கீழ் 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், 2 துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம்,

    2 உப விற்பனை கூடங்கள் இயங்குகின்றன. இங்கு மஞ்சள், தேங்காய், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட 20-க்கும் மேற்ப ட்ட விளை பொருட்கள் ஏல முறையில் போட்டி விலையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த 2022–-23-ல் 2 லட்சத்து 40 ஆயிரத்து 063 டன் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு அரசுக்கு ரூ.14.24 கோடி வருவாய் கிடைத்தது.

    மேலும் 80,101 டன் விளை பொருட்களை பரிவர்த்தனை மற்றும் இருப்பு வைத்து பொருளீட்டு கடனாக ரூ.1.11 கோடி விவசாயிகள், வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர்.

    அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு உட்பட்ட பர்கூர் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடம், சொந்த கட்டடத்தில் செயல்படுகிறது.

    காய்கறி, கீரை, பழங்கள், இதர வேளாண் பொருட்கள் சத்தியமங்கலம், கோபி, புன்செய் புளியம்பட்டி, அந்தியூர், கொடுமுடி, அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூட குளிர்பதன கிடங்குகளில் 5,489 டன் இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

    தேசிய வேளாண் சந்தை திட்டம் எனப்படும் இ–நாம் திட்டம் ஈரோடு, பெருந்துறை, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் விற்பனை கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2022-ல் அவல்பூந்துறை, பூதப்பாடி, பவானி, கொடுமுடி, சிவகிரி, புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, வெள்ளாங்கோவில், எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களிலும் இநாம் தொடங்கி 35,300 டன் விளை பொருட்கள், 224.32 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

    தவிர இநாம் செயலி மூலம் தங்கள் பண்ணையில் இருந்தே தரம், அளவு ஆகியவற்றை அதிகாரிகள் உதவியுடன் பதிவேற்றியும் பண்ணை வழி பரிவ ர்த்தனை செய்கின்றனர்.

    மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில் அவல்பூந்துறை, எழுமா த்தூர், கொடுமுடி, சத்திய மங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கடந்தாண்டு 2,081 டன் கொப்பரை தேங்காய் கொள்முதலானது.

    நடப்பாண்டு அவல்பூ ந்துறை, எழுமாத்தூர், கொடுமுடி, சிவகிரி, பவானி, மைலம்பாடி, பூதப்பாடி, கவுந்தப்பாடி, கோபி, சத்தி, வெப்பிலி ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    இவற்றை பயன்ப டுத்தி உயர்த்த விலையில் விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×