ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று

மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.37 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 001 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 37 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com