search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescues an"

    • தண்ணீர் குடித்து கொண்டிருந்த போது யானை சேற்றில் சிக்கிக்கொண்டது.
    • மற்றொரு ஆண் யானை தும்பிக்கையால் தள்ளி மேலே செல்ல உதவியது.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதி முழுவதும் குளம், குட்டைகள் வறண்டு கிடை க்கிறது. ஆங்காங்கே காட்டுத்தீயும் பற்றி எறிந்து வருகிறது.

    இதனால் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் அங்கும் இங்கும் சுற்றித் திரிவது வாடிக்கையாக கொண்டு ள்ளது.

    இதேபோல ஆசனூர் வனப்பகுதி யில் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீர் தேடி அலைகின்றன.

    சில குட்டைகளில் மாச டைந்த நீரை யானைகள் அருந்து வதால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நோயால் பாதிக்கப்படுகி ன்றன.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகு தியில் சேறும், சகதியுமாக உள்ள அரேப்பாளையம் குட்டையில் தண்ணீரை குடிக்க யானைகள் வந்தன.

    அதில் 2 யானைகள் குட்டையின் நடுப்பகுதியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு யானை சேற்றில் சிக்கிக்கொண்டது.

    இதனால் யானை ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலையில் அதே இடத்தில் நகர முடியாமல் தவித்தது. அப்போது உடனிருந்த மற்றொரு ஆண் யானை தும்பிக்கையால் தள்ளி மேலே செல்ல உதவியது.

    ஆனால் யானையின் கால்கள் சேறில் சிக்கியதால் அது நகர்ந்து செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது. பக்கத்தில் இருந்த யானை மீண்டும் அதன் தும்பிக்கையால் சேற்றில் சிக்கிய யானையை மீட்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதனால் கோபமுற்ற யானை நீண்ட நேரமாக பிளிறியது. பல மணி நேர போராட்டத்துக்கு பின் சேற்றில் சிக்கிய யானையை தனது தந்தத்தால் அதன் பின்பகுதி யில் பலமாக குத்தியபடி வேகமாக தள்ளியது.

    இதில் யானையின் கால்கள் சேற்றில் இருந்து விடுபட்ட மெல்ல மெல்ல நகர்ந்து மேலே ஏறியது.

    குட்டையில் இருந்து மேலே ஏறும் வரை உதவிகரமாக செயல்பட்ட மற்றொரு யானையின் செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    ×