கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி

தேவாலயங்களில் கூடுதல் வசதிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நிதி உதவி மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி
Published on

ஈரோடு:

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவால யங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்கு தல் போன்ற வசதிகள் கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியதொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. 20 வருடங்க ளுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்துவ தேவாலயங்களை ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மை யினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூடுதல் கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகலாம் என

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com