என் மலர்
ஈரோடு
- வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நல்லிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் கவுண்டர். இவரது மனைவி பெரியம்மாள் (50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு பெருமாள் கவுண்டர் இறந்து விட்டார். இவர்களது மகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். பெரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு 8 மணி அளவில் பெரியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் 2 மர்ம நபர்கள் நுழைந்தனர். பின்னர் அதில் ஒருவர் பெரியம்மாளின் வாயை பொத்தினார். அப்போது மற்றொரு வாலிபர் அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் 2 பேரும் நகையுடன் தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியம்மாள் பதட்டத்தில் சத்தம் போட்டு அலறினார். அதற்குள் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பெரியம்மாள் சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள நசியனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவரின் உறவினர் வீடு அந்த பகுதியில் உள்ளது.
கணேசனின் உறவினர் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று விட்டார். வீடு கடந்த 2 மாதங்களாகவே பூட்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் கணேசன் அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை தொடர்ந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடை க்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து கணேசன் சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
- விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.21.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.77-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.
இதேபோல் மொடக்குறிச்சி, வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 89 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது.
- வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.
- ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி. ரோடு கோவிந்தராஜன் நகரை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சந்துரு (36). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இதனால் சந்துரு குடி பழக்கத்திற்கு அடிமையாகி விரக்தியில் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சந்துரு திடீரென எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சந்துருவின் நண்பர் உதவியுடன் சந்துருவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பழையபாளையம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பெருமாள் (60). இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு வெள்ளியங்கிரி (37) என்ற மகனும், கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர்.
இதில் கலைச்செல்வி தாளவாடியில் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.
வெள்ளியங்கிரி வெட்டுக்காட்டுவலசில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். பெருமாளும், சரஸ்வதியும் இந்திரா காந்தி வீதியில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பெருமாளுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. எது சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
அவருக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த அவஸ்தை காட்டிலும் செத்துப்போவது மேல் என அடிக்கடி பெருமாள் கூறி வந்தார்.
சம்பவத்தன்று பெருமாள் வீட்டில் இருந்த சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு விட்டார்.அவரை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பழமங்கலத்தை சேர்ந்தவர் வீரன் (65). இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார்.
மகன் வேலுசாமி என்பவருடன் வீரன் வசித்து வந்தார். வீரனுக்கு கடந்த 10 ஆண்டாக வயிற்று வலி இருந்தது. இதற்காக அவர் குடலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னும் வலி குறையவில்லை. வீரனுக்கு மது பழக்கமும் ஏற்பட்டது.
இந்நிலையில் சம்பவத்தன்று வயிறு வலி அதிகமாக இருந்ததால் வெறுப்படைந்த வீரன் வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரது மகன் மற்றும் உறவினர்கள் வீரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊத்தங்கரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.
- வீரப்பன் சத்திரம் போலீசார் அங்கு சென்று 10 பவுன் நகையை மீட்டனர்.
ஈரோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). பூட்டிய வீட்டுக்குள் புகுந்து திருடுவதில் கில்லாடி. இவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
ஈரோடு மாநகர பகுதியில் 2 திருட்டு வழக்குகள், சித்தோட்டில் 2 திருட்டு வழக்குகளும் இவர் மீது உள்ளது.இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த திருப்பதியை ஆந்திரா மாவட்டம் சித்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகரில் அவர் மீது பதிவாகியிருந்த திருட்டு வழக்கை விசாரிப்பதற்காக திருப்பதியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஆந்திரா விரைந்து சென்றனர்.
பின்னர் சிறப்பு அனுமதி பெறப்பட்டு நேற்று முன்தினம் திருப்பதி ஈரோடுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஈரோடு மாநகரில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் அவர் திருடிய 10 பவுன் நகையை கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.
அதன் பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார் அங்கு சென்று 10 பவுன் நகையை மீட்டனர். ஒரு நாள் காவல் முடிவு அடைந்ததையடுத்து நேற்று மீண்டும் திருப்பதியை ஆந்திரா மாவட்டம் சித்தூர் போலீசாரிடம் வீரப்பன் சத்திரம் போலீசார் ஒப்படைத்தனர்.
- பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் ரித்திகா மீது கொட்டியது.
- இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து புங்கம்பள்ளி கைகாலன் குட்டை பகுதி யை சேர்ந்தவர் செல்ல ப்பாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சத்யா வீட்டுக்கு வெளியே வெந்நீர் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா அங்கு யாரும் இல்லாத போது பாத்திரத்தில் இருந்து வெந்நீர் எடுக்க முயன்றார்.
அப்போது ரித்திகா திடீரென பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் அவர் மீது கொட்டியது. இதனால் ரித்திகா அலறி துடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரித்திகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்திகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
- கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 9ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 9 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து முருகன் சாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலை மீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.
- பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.
புளியம்பட்டி:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).
இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.
- கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- பங்களாப்புதூர் போலீசார் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
டி.என்.பாளையம்:
கோபிசெட்டிபாளைய த்தை அடுத்த அக்கரை கொடிவேரி இன்னாசியார் வீதியை சேர்ந்தவர் குபேந்திரன் (42). டிரைவர். சம்பவத்தன்று இரவு குபேந்திரன் சத்தியமங்கலத்தில் இருந்து கொடிவேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
சின்னட்டிபாளையம் அருகே வந்த போது கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் குபேந்திரன் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் குபேந்திரன் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.
- சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (47). இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு இவர் ஓலப்பாளையத்தில் உள்ள கம்பெனியின் கிளை அலுவலகத்தில் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் ஈங்கூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈங்கூர் நட்சத்திரா கார்டன் என்ற பகுதியில் வந்தபோது 3 பேர் கும்பல் காரை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.
பின்னர் 3 பேர் கும்பல் காருக்குள்ளேயே சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.
இந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு சத்தியமூர்த்தி கட்டப்பட்டிருந்த கை, கால்களை அவிழ்த்து கொண்டு இந்த சம்பவம் குறித்து கம்பெனிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமூர்த்தி காரில் பணம் கொண்டு வரும் தகவலை தெரிந்த யாரோ ஒருவர்தான் ஆட்களை வைத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த அடிப்படையில் கார் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து கார் நிறுத்தப்பட்ட இடம் வரை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறன்றனர்.
இந்த துணிகர வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
- வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாசிலை அருகே தமிழ்செல்வன் என்பவர் அட்சயபாத்திரம் என்ற பெயரில் மதிய வேலையில் கட்டணமின்றி இலவச உணவு வழங்கும் உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் இரவு நேர காவலாளியாக தோப்புபாளையத்தை சேர்ந்த முருகேசன் (50) என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் இரவு சாப்பிட்டுவிட்டு கடையில் பணியில் இருந்தார்.
அப்போது குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் கடையின் முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைப்பார்த்த காவலாளி முருகேசன் அவர்களிடம் சென்று ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்டார்.
இதனையடுத்து 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
வாலிபர்கள் தாக்கியதில் காயமடைந்த காவலாளி முருகேசனை அங்கிருத்த பொதுமக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முருகேசன் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் ஓட்டல் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது காவலாளி முருகேசனை 3 பேர் தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது காவலாளியை தாக்கியது மேக்கூர் பகுதியை சேர்ந்த பெருந்துறை பேரூர் தி.மு.க. இளைஞர் அணி துணைச்செயலாளர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான் (27), எண்ணவன்னாங்காடு பகுதியை சேர்ந்த வினோத் (25) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே அவர்கள் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே ஓட்டல் காவலாளியை தி.மு.க. பிரமுகர் சந்தோஷ்குமார் என்கிற ரகுமான், வினோத் ஆகியோர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
- பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.
ஈரோடு :
ஈரோடு சம்பத் நகரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடம் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளிக்கூட நிர்வாகம் அதன் பின்னர் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பலமுறை வாடகை கேட்டும் பள்ளிக்கூட நிர்வாகம் செலுத்தவில்லை.
இதற்கிடையில் வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிர்ணயித்திருப்பதாக கூறி பள்ளிக்கூட நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதில் அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.
எனினும் பள்ளிக்கூட நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சென்றனர். பின்னர் பள்ளியின் முன்பக்க கதவை பூட்டி 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
இதன் காரணமாக இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.






