என் மலர்
ஈரோடு
- பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
- மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
ஈரோடு:
உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெறும் விவசாயி களின் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்கள் முதியவர்களாக மட்டுமே இருப்பதால் விவசாயிகள் பெரும்பாலானோர் பயிர் கடன் பெற முடியாத சூழ் நிலை ஏற்பட்டது.
எனவே பயிர் கடன் பெறுவதற்கு விவசாயிக ளுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டுறவு த்துறை மானியக் கோரிக்கை யின் போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
- கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
ஈரோடு:
பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4,099 மூட்டை கொப்பரைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் முதல் தரக்கொப்பரைகள் 2,304 மூட்டைகள் வர பெற்றிருந்தன. இவை குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.76.55-க்கும், அதிகபட்சமாக ரூ.83.09-க்கும் விற்பனையாகின.
2-ம் தரக்கொப்பரைகள் 1,654 மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவை குறைந்தபட்சமாக கிலோ ரூ.43.85-க்கும், அதிகபட்சமாக ரூ.76.76-க்கும் விற்பனையாகின.
மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரம் கிலோ கொப்பரைகள் விற்பனையாகின.
இவற்றின் மொத்த விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 46 லட்சம் ஆகும் என விற்பனை கூடக்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
- சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலம் அடுத்த புதூர் என்ற இடத்தில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வன் (43) என்பதும்,
அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வனை கைது செய்தனர்.
- வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
- தற்கொலைக்கு நானே காரணம் என்று உருக்கமாக எழுதி உள்ளார்.
நம்பியூர்:
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42). இவரது மனைவி சுசித்ரா. ஈரோடு மா வட்டம் நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வினோத்குமார் ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.
இவர்கள் நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் வினோத்குமார் மனைவியை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் தனியாக நம்பியூர் வந்தார்.
இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தெரிய வந்ததும் நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு வினோத்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடல் அழுகி இருந்தது.
அவரது வீட்டில் இருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்னை மன்னித்து விடுங்கள். நான் சரியான முறையில் குடும்பம் நடத்தவில்லை.
எனக்கு அதிக அளவில் கடன் உள்ளது. சுசியை எதுவும் சொல்லாதீர்கள். எனது தற்கொலைக்கு நானே காரணம். எனது கடன்களை எப்படியாவது அடைத்து விடலாம் என்று 3 மாதங்களாக போராடினேன்.
ஆனால் மேற்கொண்டு அதிகளவில் கடனாளியாக மாறி விட்டேன். இனிமேல் என்னால் வாழ முடியாது. எனது கடன்களை என்னால் அடைக்க ஒரு வழியும் எனக்கு தோன்றவில்லை.
என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு உரிய காலத்தில் கடனை செலுத்த முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். எனது தற்கொலைக்கு நானே காரணம் என்று உருக்கமாக எழுதி உள்ளார். கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பவானி:
பவானி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மளிகை கடை, மொத்த வியாபாரம் செய்யும் கடைகள், உணவுப் பொருள் விற்பனை செய்யும் கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்பட பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக் விற்பனை செய்யப் படுகிறதா?
அல்லது பயன் பயன்படுத்தி வருகிறார்களா? என கண்டறியும் வகையில் பவானி நகராட்சி ஆணை யாளர் (பொறுப்பு) கதிர்வே ல் மற்றும் பரப்புரை யாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்ட னர்.
சோதனையில் 5 கடைகளில் சுமார் 20 கிலோ கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. அவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் 5 கடைகளுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
ேமலும் தடை செய்யப்பட்ட கேரிபேக் விற்பனை செய்யப்பட்டு வருவது மீண்டும் கண்டறி யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
- அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (60). இவரது மகன் இளங்கோ (24). இளம் வயதிலேயே மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளங்கோவுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு வலிப்பு நோய் பாதிப்புக் குள்ளாகி இருந்தார்.
இதற்காக அரசு மருத்துவமனையில் இளங்கோ சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். ஆனாலும் முறையாக மாத்திரைகள் சாப்பிடாமல் மது குடிப்பதையும் தொடர்ந்துள்ளார்.
இதனால் இளங்கோவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது இளங்கோவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விட்டதாக தெரிகிறது. நேற்று அதிகாலை 2 மணியளவில் இளங்கோவுக்கு மீண்டும் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இளங்கோ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.
- திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம சர்க்கரை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு திருமண மாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் 2½ வயதில் நவின் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் பவித்ரா வீட்டில் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து உறவினர்கள் சென்று விட்டனர். வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்து பவித்ராவை கூப்பி ட்டு உள்ளார். எந்த பதிலும் வராததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளார்.
இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.
உடனே உறவினர்கள் உதவியுடன் பவித்ராவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பவித்ராவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
- சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பா ளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை நேரத்தில் ஈங்கூர் தொழிற்சா லையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பால ப்பா ளையம் தொழிற்சாலைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சா லைக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் நிறுவ னத்தின் அலுவலக பணி யாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழி ற்சாலையில் பணப்பரி வர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சா லைக்கு கிளம்பி சென்றார்.
பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற னர்.
இதுகுறித்து சென்னி மலை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ ண்டனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதாவது பணம் கொண்டு செல்லப்பட்டது நன்கு தெரிந்து தான் இந்த துணிகர கொலையில் ஈடுபட்டு ள்ளனர். எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் குற்றவாளி களை கண்டுபிடிக்கும் வகையில் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டிரு க்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெ க்டர் சரவணன் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டுள்ளது. போலீசார் ஊழியர் சத்திய மூர்த்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
- மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும்,
ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலைவாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 10 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதையும், அதே பகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை ப்பள்ளியினையும்,
ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளதையும், ஊசிமலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்க ப்படவுள்ள இடத்தினையும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளிக்கு செல்வதற்கான சாலையில் கான்கிரீட் தளம் அமை யவுள்ள இடத்தி னையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ ர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை பெற்று வீடு திரும்பியவரிடம் தொலை பேசியில் நலம் விசாரித்து, மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
முன்னதாக சோளகனை பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஆகியவற்றை தங்கு தடையின்றி கிடை த்திட நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொ டர்ந்து அரசுபொது த்தேர்வில் 12-ம் வகுப்பில் பர்கூர் அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் பயின்ற மாணவி ஜோதிகா 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
தொடர்ந்து பர்கூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், வெண்ணெய் மற்றும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணி, விளக்கு, பூந்தொட்டி உள்ளிட்ட பொரு ட்களையும் பார்வையிட்டார். மேலும் மாட்டின ஆராய்ச்சி நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்புடைய அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்த், இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர்.ராஜசேகர், உதவிபொறியாளர் சிவபிரசாத், பர்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் மலையன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.58 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லா ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலை யில் பவானிசாகர் அணை யின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்த தால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ள்ளது.
இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,055 கன அடி தண்ணீர் வருகிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்க ன்கோட்டை பாசனத்தி ற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானி சாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.54 அடியாக உள்ளது. பெரு ம்பள்ளம் அணையின் நீர்மட்டம் 23.29 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.26 அடியாக உள்ளது.
- விவசாயிகள் 895 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
- விற்பனை மதிப்பு ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்து 410 ஆகும்.
ஈரோடு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை
விற்பனைக்கூடத்தில் இருந்து கரும்புச்சர்க்கரை எனப்படும் நாட்டுச்சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 895 மூட்டைகள் நாட்டுச்ச ர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.
இதில் 60 கிலோ எடையிலான மூட்டை முதல் தரம் குறைந்தபட்ச விலை யாக ரூ.2,730-க்கும், அதிகபட்சமாக ரூ.2,740- க்கும் விற்பனை யானது.
2-ம் தரம் குறைந்த பட்சமாக கிலோ ரூ.2,590-க்கும், அதிகபட்சமாக ரூ.2,650- க்கும் விற்பனை யானது.
இதில் 38 ஆயிரத்து 820 கிலோ எடையிலான 647 நாட்டுச்சர்க்கரை மூட்டை கள் விற்பனை யாகின. இதன் விற்பனை மதிப்பு ரூ.17 லட்சத்து 19 ஆயிரத்து 410 ஆகும் என விற்பனை க்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- பெண் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11 வார்டுகளில் தி.மு.க. கவுன்சிலர்களும், ஒரு வார்டில் அ.தி.மு.க. கவுன்சிலரும், 2 சுயேச்சைகளும், ஒரு வார்டில் ம.தி.மு.க. கவுன்சிலரும் உள்ளனர்.
இந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உள்ளார். துணைத்தலைவராக ம.தி.மு.க.வை சேர்ந்த துளசிமணி என்பவர் உள்ளார்.
இவர் பேரூராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் எந்த ஒரு கணக்கு வழக்குகளையும் தன்னிடம் காட்டவில்லை என்றும், குறிப்பாக மினிட் நோட், பில் புக், தினசரி வருகை பதிவு போன்றவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறி வந்தார்.
இதை கண்டித்து துணைத்தலைவர் துளசிமணி நேற்று காலை 11 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி தெரிய வந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன், துணைத்தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனாலும் இதில் சமரசம் அடையாத துளசிமணி தொடர்ந்து உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தெரிய வந்ததும் அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபாலன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரவு 8 மணி அளவில் துணைத்தலைவர் துளசிமணி உள்ளிருப்பு போராட்டத்தை முடித்தார்.
பெண் துணைத்தலைவர் 9 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.






