என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.
    • ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீஷியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக்கல் மோட்டார் வைக்கிள், ஏ.சி.மெக்கானிக் ஆகிய என்ஜினீயரிங் பாடப்பிரிவும்,

    என்ஜினீயரிங் அல்லாத கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கட்டிட பட வரைவாளர் தொழில் பிரிவுகள், இண்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய தொழில் பிரிவுகளில் பயிற்சி பெறலாம்.

    பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மற்றும் தோல்வி அடைந்தவர்கள் அரசு ஐ.டி.ஐ.யை நேரில் அணுகலாம்.

    பயிற்சி பெறுவோருக்கு மாதம் 750 ரூபாய் உதவித்தொகை, லேப்டாப், சைக்கிள், சீருடை, பாடப்புத்தகம், காலணி, பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் 10-ம் வகுப்புடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் முறையே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சி பயிற்சி உதவித்தொ கையுடன் வழங்கப்படும். பிரபல தொழில் நிறுவ னங்கள், மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.

    ஆன்லைனில் விண்ணப்ப பதிவு கட்டணம் 50 ரூபாய் செலுத்த ஏ.டி.எம். கார்டு, போன் பே, ஜி பே வசதியுடன் வரலாம். ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.

    வரும் ஜூன் மாதம் 7-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை 0424 2275244, 0424 2270044 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது.
    • இதனால் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான வேளாண் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடப்பதாக இருந்தது.

    ஆனால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. ஈரோடு தாலுகாவில் நடக்கும் ஜமாபந்தியில் கலெக்டரும், பிற தாலு காக்களில் மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளி ட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பது கட்டாய மாகிறது.

    இதனால் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டு அதற்கு பதிலாக வரும் 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது.

    காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறுதலும், 11.30 மணி முதல், 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தலும்,

    மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்கள் விள க்கம் அளித்தலும் நடக்க உள்ளது. விவசாயிகள் தங்களது பகுதி விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை மனுவாக வழங்கி தீர்வு பெறலாம் என அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    • இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
    • கலெக்டர் வாட்ஸ்-அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இச்சாலையையொட்டி ஆனந்த சராகம் ஏரிக்கு செல்லும் ஓடை உள்ளது.

    இந்த ஓடையில் கவுந்த ப்பாடி மற்றும் சுற்றுப்பகு தியில் உள்ள கோழி உள்ளி ட்ட இறைச்சி கடையினர், இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவு, குடல், எலும்புகள் போன்ற வற்றை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நாய் உள்ளிட்ட பல விலங்குகள், அவற்றை தூக்கி சென்றும், சாலை உள்ளிட்ட பல இடங்களில் விட்டு செல்கின்றன.

    இதுபோல கோவில் பகுதியிலும் இறைச்சி கிடப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் மக்களும், பக்தர்களும் சிரமப்படு கின்றனர். இது பற்றி ஏற்கனவே பல அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு இப்பிரசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இறைச்சி கழிவுகளை வேறு இடத்தில் கொட்டி பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் வாட்ஸ்-அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த துடுப்பதி, கருமாண்டி செல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). இவரது மனைவி பரிமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடிப்ப ழக்கம் காரணமாக மூர்த்தி க்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி வரும்போதெல்லாம் தான் இறந்து விட போவதாக மூர்த்தி கூறிவந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். 

    • புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி பகுதியில் வாரச்ச ந்தை புதன் மற்றும் வியாழ க்கிழமைகளில் கூடுகிறது.
    • மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி பகுதியில் வாரச்ச ந்தை புதன் மற்றும் வியாழ க்கிழமைகளில் கூடுகிறது. இந்த சந்தை தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தை யாக திகழ்ந்து வருகிறது.

    இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களான திருப்பூர், நாமக்கல், கரூர், மற்றும் தாராபுரம், மேட்டுப்பா ளையம் மற்றும் புளியம்பட்டி சுற்றுப் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம ங்களில் இருந்தும் விவசாயி கள் கால்நடை களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

    மேலும் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநி லங்களில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியா பாரிகள் வந்து கால்நடை களை வாங்கி செல்கிறார்கள்.

    இந்நிலையில் இந்த வாரம் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் கூடிய மாட்டு சந்தையில் ஜெர்சி இன மாடுகள் ரூ.45 ஆயிரம் வரையும், சிந்து இன மாடுகள் ரூ.48 ஆயிரம் வரையும் எருமை மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    இதில் நாட்டுமாடுகள் ரூ.65 ஆயிரம் வரையும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ. 5 ஆயிரம் முதல்ரூ.12 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் எடை க்கேற்ப வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதில் மொத்தம் ரூ.70 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, பவானி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • மேல்மட்ட பாலம் அமைத்தாலும் மீண்டும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விடும் என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அனல் காற்று, புழுக்கத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு ஒரு சில இடங்களில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

    இதேப்போல் வரட்டுபள்ளம், அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, பவானி போன்ற இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக வரட்டுபள்ளம் அணைப்பகுதியில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 38.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேப்போல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இங்கு 33 குக்கிராமங்கள் உள்ளன. மேற்கு மலை, கிழக்கு மலை என 2 பகுதிகளாக உள்ள இந்த பர்கூர் மலையில் கிழக்கு மலை பகுதியான ஈரெட்டி பகுதியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஈரெட்டி பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மழை தண்ணீர் மூழ்கடித்து சென்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களும், பொதுமக்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    பின்பு தண்ணீர் வரத்து மெல்ல மெல்ல குறைந்த பிறகு இரு புறங்களிலும் வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் தவித்தனர்.

    தற்போது தரைப்பாலத்தில் மேல்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பாலத்திற்கு கீழே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ஓடையில் தண்ணீர் அதிகமாக வரும் பகுதியில் தூண்கள் அமைக்காமல் தண்ணீர் குறைவாக வரும் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த மேல்மட்ட பாலம் அமைத்தாலும் மீண்டும் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு பாலம் இடிந்து விடும் என மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினர்.

    எனவே இதனை அதிகாரிகள் பார்வையிட்டு வெள்ளநீர் அதிக அளவில் வரக்கூடிய இடத்தில் தூண்கள் அமைக்க வேண்டும். அதன் பிறகு மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுபள்ளம்-38.6, அம்மாபேட்டை-22.6, கவுந்தப்பாடி-20, பவானி-2.

    • ஜீவா குடிபோதையில் ஊரில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து தந்தை மற்றும் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தார்
    • அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நாதக்காடையூர் கொமரபாளையம் கொல்லன் வலசு காலனி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ஜீவா (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜீவா கோவில் திருவிழாவில் டிரம் செட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜீவா அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் ஜீவா குடிபோதையில் ஊரில் உள்ள பொதுக்கிணற்றின் சுவர் மீது அமர்ந்து தந்தை மற்றும் அண்ணனிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜீவா கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜீவாவின் தந்தை மற்றும் அவரது அண்ணன் கிணற்றுக்குள் இறங்கி ஜீவாவை மீட்க முயன்றனர். அதற்குள் ஜீவா தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    பின்னர் இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது.
    • தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பவானி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவருக்கு சொந்தமான லாரியை சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஓட்டி வருகிறார்.

    இவர் நாக்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு வந்தார். நேற்று நள்ளிரவு 12.50 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு-சத்தி மெயின் ரோட்டில் ஊத்துக்காடு என்ற பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென லாரி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் வெங்கடேஷ் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பினார். அந்த நேரத்தில் தீ மளமளவென பிடித்து லாரி முழுவதும் எரிய தொடங்கியது.

    பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கபப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புகழேந்தி தலைமையில் பவானி மற்றும் ஈரோட்டில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு எரிந்து சேதமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது லாரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இந்த தீ விபத்தால் நள்ளிரவில் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது.
    • மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். அந்த நபர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டார்.
    • போக்குவரத்து நெரிசலுக்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சசிமோகன் சென்னை கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டார்.

    இவர் இன்று ஈரோடு மாவட்டத்தின் 29-வது போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நான் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தேன். அதைத்தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் துணை கமிஷனராக பதவி வகித்தேன்.

    அதைத்தொடர்ந்து கடந்த 2 வருடமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி விட்டு இப்போது ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று உள்ளேன்.

    ஈரோடு மாவட்டத்தில் ரவுடியிசம், லாட்டரி, கள்ள சாராயம், கஞ்சா, குட்கா போன்றவற்றை ஒழிப்பேன். மேலும் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க இரவு நேரத்தில் ரோந்து தீவிரப் படுத்தப்படும்.

    ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன் படுத்துவதை தீவிரமாக கண்காணித்து கட்டுப் படுத்தப்படும். மேலும் 9498111511 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் பஸ்சை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.
    • இன்று அந்த பஸ் வரவில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 84 பஸ்களில், 62 பஸ் புறநகர பேருந்தாக மதுரை, நாகர்கோயில், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயங்கி வருகிறது. மேலும் 22 பஸ்கள் டவுன் பஸ் ஆக கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் அவ்வப்போது வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளுக்கு பஸ்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதில் குறிப்பாக அந்தியூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம பகுதிக்கு செல்லக்கூடிய பி 13 என்ற டவுன் பஸ், எண்ணமங்கலம், கோயிலூர் வரையில் சென்று வரும் பஸ்சில் பள்ளி நாட்களில் அந்த பகுதியில் இருந்து அந்தியூர் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

    மேலும் விசேஷ நாட்களில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த பஸ்சை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் அதிகளவில் அந்த பகுதி மக்கள் இந்த பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், இன்று அந்த பஸ் வரவில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்.

    மேலும் கடந்த வாரம் மதியம் 1.40 மணி அளவில் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு செல்லக்கூடிய புறநகர் பஸ் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தார்கள். பஸ் புறப்படும் நேரம் ஆகியும் புறப்படவில்லை.

    டிரைவர் வந்தும் நடத்துனர் இல்லாததால் பஸ்சில் ஏறிய அனைத்து பயணிகளையும் கீழே இறங்கி மாற்று பஸ்சிற்கு அனைவரையும் போக சொல்லி கூறினர்.

    இதனையடுத்து பஸ்சில் அமர்ந்திருந்தவர்கள் மாற்று பஸ்சில் சீட்டு கிடைக்குமோ, கிடைக்காதா என்று முந்தி அடித்துக்கொண்டு சென்று பஸ்சில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். எனவே வரும் காலங்களில் அந்தியூர் பணிமனையில் இதுபோன்று நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள், பஸ் பயணிகள் கேட்டுக்கொ ண்டுள்ளனர்.

    • வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார்.
    • தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ரெட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சரவணன் . இவரது மனைவி கோகி லவாணி. இவர்களுக்கு விஷ்ணு பிரியா (25) என்ற மகளும், அருள்சாரதி (22) என்ற மகனும் உள்ளனர்.

    சரவணன் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வந்தார். அருள்சா ரதி வெளி நாட்டில் ஐ.டி. கம்பெனி யில் வேலை க்கு செல்ல வேண்டி கடந்த 6 மாதமாக சென்னையில் உள்ள தனி யார் பயிற்சி மையத்தில் பயி ற்சி பெற்று வந்தார்.

    இந்நிலை யில் கடந்த 21-ந் தேதி அருள்சாரதி பயிற்சி முடித்து விட்டு செ ன்னையில் இருந்து வீட்டி ற்கு வந்தார். கடந்த 2 நாட்களாக வெளிநாடு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்க வி ல்லை என்று கூறி புலம்பி வந்துள்ளார். அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது அருள்சாரதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருள்சாரதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×