கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

பெருந்துறை அடுத்த துடுப்பதி, கருமாண்டி செல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (32). இவரது மனைவி பரிமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். குடிப்ப ழக்கம் காரணமாக மூர்த்தி க்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வயிற்று வலி வரும்போதெல்லாம் தான் இறந்து விட போவதாக மூர்த்தி கூறிவந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூர்த்தி தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com