என் மலர்
நீங்கள் தேடியது "புதிய போலீஸ் சூப்பிரண்டாக"
- ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டார்.
- போக்குவரத்து நெரிசலுக்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சசிமோகன் சென்னை கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜி.ஜவகர் நியமிக்கப்பட்டார்.
இவர் இன்று ஈரோடு மாவட்டத்தின் 29-வது போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் கடந்த 2016-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தேன். அதைத்தொடர்ந்து சென்னை அண்ணா நகரில் துணை கமிஷனராக பதவி வகித்தேன்.
அதைத்தொடர்ந்து கடந்த 2 வருடமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி விட்டு இப்போது ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்று உள்ளேன்.
ஈரோடு மாவட்டத்தில் ரவுடியிசம், லாட்டரி, கள்ள சாராயம், கஞ்சா, குட்கா போன்றவற்றை ஒழிப்பேன். மேலும் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க இரவு நேரத்தில் ரோந்து தீவிரப் படுத்தப்படும்.
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் பயன் படுத்துவதை தீவிரமாக கண்காணித்து கட்டுப் படுத்தப்படும். மேலும் 9498111511 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






