பெருந்துறை அருகே 3 குழந்தைகளின் தந்தையுடன் கல்லூரி மாணவி மாயம்

40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது. மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர்.
பெருந்துறை அருகே 3 குழந்தைகளின் தந்தையுடன் கல்லூரி மாணவி மாயம்
Published on

பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 40 வயது நபருடன் அந்த மாணவி மாயமாகி இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். அந்த நபர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com