search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயின்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் 508 மதிப்பெண் பெற்ற மாணவி ஜோதிகாவை பாராட்டி கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா நினைவு பரிசு வழங்கினார். அருகில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உள்ளார்.

    வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

    • கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.
    • மாட்டின ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி க்குட்பட்ட சோளகனை பகுதியில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 3 தொகுப்பு வீடுகளையும், பாரத பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள 38 தொகுப்பு வீடுகளையும்,

    ஈரோடு வனக்கோட்டம், பர்கூர் வனச்சரகம் பழங்குடி மலைவாழ் கிராம உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு ள்ள ஆழ்துளை கிணறு மற்றும் 10 லிட்டர் கொள்ள ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப் பட்டுள்ளதையும், அதே பகுதியில் செயல்படும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை ப்பள்ளியினையும்,

    ஒட்டனூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.23 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கப் பட்டுள்ளதையும், ஊசிமலை பகுதியில் செயல்படும் துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு சாலை வசதி அமைக்க ப்படவுள்ள இடத்தினையும் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளிக்கு செல்வதற்கான சாலையில் கான்கிரீட் தளம் அமை யவுள்ள இடத்தி னையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நோயாளி களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ ர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு குழந்தை பெற்று வீடு திரும்பியவரிடம் தொலை பேசியில் நலம் விசாரித்து, மருத்துவ மனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முன்னதாக சோளகனை பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஆகியவற்றை தங்கு தடையின்றி கிடை த்திட நடவடிக்கை மேற்கொ ள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொ டர்ந்து அரசுபொது த்தேர்வில் 12-ம் வகுப்பில் பர்கூர் அரசுபழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் பயின்ற மாணவி ஜோதிகா 600-க்கு 508 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து கலெக்டர் மாணவியை பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார்.

    தொடர்ந்து பர்கூர் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மையத்தில் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய், தயிர், வெண்ணெய் மற்றும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணி, விளக்கு, பூந்தொட்டி உள்ளிட்ட பொரு ட்களையும் பார்வையிட்டார். மேலும் மாட்டின ஆராய்ச்சி நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்புடைய அலுவ லர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவசங்கர், ஆனந்த், இணை இயக்குநர் (குடும்பநலம்) டாக்டர்.ராஜசேகர், உதவிபொறியாளர் சிவபிரசாத், பர்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் மலையன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×