சென்னிமலை முருகன் கோவிலில் இன்று 9 ஜோடிகளுக்கு திருமணம்

வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடந்த போது எடுத்த படம்.
சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடந்த போது எடுத்த படம்.
Published on

சென்னிமலை:

சென்னிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில்  9ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.

இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 9 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து முருகன் சாமியை தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.

திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலை மீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com