தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.25 லட்சம் வழிப்பறி- 3 பேர் கும்பல் துணிகரம்

சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.
தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.25 லட்சம் வழிப்பறி- 3 பேர் கும்பல் துணிகரம்
Published on

சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (47). இவர் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் இரும்பு உருக்கு ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு இவர் ஓலப்பாளையத்தில் உள்ள கம்பெனியின் கிளை அலுவலகத்தில் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் ஈங்கூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஈங்கூர் நட்சத்திரா கார்டன் என்ற பகுதியில் வந்தபோது 3 பேர் கும்பல் காரை வழிமறித்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் சத்தியமூர்த்தியை மிரட்டி காருக்குள் ஏறிக் கொண்டனர். அதில் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு ஈரோடு ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்தார்.

பின்னர் 3 பேர் கும்பல் காருக்குள்ளேயே சத்தியமூர்த்தியின் கை, கால்களை கட்டி போட்டு காரில் இருந்த ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து கொண்டு வேறு ஒரு வாகனத்தில் தப்பி சென்றனர்.

இந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு சத்தியமூர்த்தி கட்டப்பட்டிருந்த கை, கால்களை அவிழ்த்து கொண்டு இந்த சம்பவம் குறித்து கம்பெனிக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமூர்த்தி காரில் பணம் கொண்டு வரும் தகவலை தெரிந்த யாரோ ஒருவர்தான் ஆட்களை வைத்து இந்த வழிப்பறியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த அடிப்படையில் கார் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து கார் நிறுத்தப்பட்ட இடம் வரை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறன்றனர்.

இந்த துணிகர வழிப்பறி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com