என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெந்நீர் கொட்டி"

    • பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் ரித்திகா மீது கொட்டியது.
    • இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து புங்கம்பள்ளி கைகாலன் குட்டை பகுதி யை சேர்ந்தவர் செல்ல ப்பாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).

    இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சத்யா வீட்டுக்கு வெளியே வெந்நீர் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா அங்கு யாரும் இல்லாத போது பாத்திரத்தில் இருந்து வெந்நீர் எடுக்க முயன்றார்.

    அப்போது ரித்திகா திடீரென பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் அவர் மீது கொட்டியது. இதனால் ரித்திகா அலறி துடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரித்திகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்திகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×