என் மலர்
ஈரோடு
- ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
- மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும், பள்ளி விடுமுறை தினம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமாக விளங்கக்கூடிய சென்னிமலை முருகன் கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தருகிறார்கள்.
இன்று செவ்வாய்க்கி ழமை மற்றும் முருகனின் பிறந்த மாதமான வைகாசி மாதம் மற்றும் அக்னி நட்சத்திரம் நிறைவு, பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கி னார்கள்.
அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்த பொழுது பலர் கோவிலுக்கு முன்பு காத்திருந்து கோ பூஜை பார்த்து தரிசனம் செய்தனர். அதிகப்படியான பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்தில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் முருகனை வழிபாடு செய்தனர்.
சிறப்பு தரிசனத்திலேயும் அரை மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வணங்கி சென்றனர். மலை மீது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் எடுத்த இடத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை சரி செய்வதற்காக தனியார் செக்யூரிட்டிகளை கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்தனர். மலைக்கோவில் பஸ்களும் பக்தர்கள் வசதிக்காக தொடர்ந்து இயக்கப்பட்டது.
- ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது.
- ரஹிம்ஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
ஈரோடு:
மேற்குவங்க மாநிலம், மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.
ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது பஸ் நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்த போது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம்.
இதுகுறித்து, ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது, அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளனர்.
இதைக்கண்ட அருகில் இருந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களை தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து ரஹிம்ஷா, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச்சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ண மூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் காலனி பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த பகுதியில் மேல்நிலைத் தண்ணீர் தொட்டி பழுது அடைந்தது. இதையடுத்து அந்த மேல் நிலை தொட்டி அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அதே இடத்தில் ஒரு மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்) வைத்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். எனினும் 6 மாதம் ஆகியும் மேல் நிலை தொட்டி அமைத்து தரவில்லை என கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் அந்தியூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் மேல்நிலை தொட்டி (சின்டெக்ஸ் டேங்க்) அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அந்த பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.
இந்த நிலையில் இன்று காலை அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர் மலை கருப்புசாமி கோவில் ரோடு பகுதிக்கு வந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் இருந்த மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கு மேல் மேல் ஆகிறது. ஆனால் இன்னும் எங்கள் பகுதிக்கு மேல்நிலைத் தொட்டி கட்டி தரவில்லை. எங்கள் பகுதியில் நள்ளிரவில் தான் தண்ணீர் விடுகிறார்கள். நாங்கள் காத்திருந்து தண்ணீரை பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பெரும்பாலும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.
வீட்டிற்கு வந்த உடன் சிறிது ஓய்வு எடுக்கலாம் என்றால் அதற்கும் வழியின்றி தண்ணீர் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி, கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் உடனடியாக இந்த பகுதிக்கு மேல்நிலை தொட்டி அமைத்து தர வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேசி உறுதியாக மேல் நிலை தொட்டி அமைத்துக் கொடுக்க நாங்கள் வழிவகை செய்கின்றோம் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
- ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஈரோடு,
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சாராயம் மற்றும் போலி மதுபானங்களின் உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் முதல்- அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இன்று தமிழக முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு முன்னிலை வகித்தார்.
முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்பிரமணி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.டி.தங்கமுத்து, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராஜன்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணை செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா, மாவட்ட வக்கீல் அணி தலைவர் துரை சக்திவேல், சிந்தாமணி இயக்குனர் பொன் சேர்மன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மாதையன், முன்னாள் கவுன்சிலர் கோபால் சூரிய சேகர் பிரதிநிதி கஸ்தூரி உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம்- மொடச்சூர் ரோட்டில் உள்ள ஜியான் தியேட்டர் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.
கோபிசெட்டிபாளையத்தில் தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.பேசியதாவது:-
இன்றோடு அக்னி நட்சத்திரம் வெயில் நிறைவு பெறபோகிறது. அதே போல தி.மு.க. ஆட்சியும் முடியபோகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம், ஒழுங்கு சரி இருப்பது இல்லை. தற்போது கள்ளச்சாராயம் விற்பனையால் 22 பேர் இறந்து உள்ளனர்.
எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சி 4 ஆண்டுகள் நடைபெற்றது. அந்த ஆட்சியில் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதே போல 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.
இதில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, கோபி நகர அ.தி.மு.க. செயலாளர் பிரினியோகணேசன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி டவுன் பஸ் நிலையம் அருகே மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ., அருள்ஜோதி கே.செல்வராஜ், வைகைதம்பி என்கிற ரஞ்சித்குமார், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன், பெட்டிசன் மணி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
- ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
- முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார்.
புளியம்பட்டி,
புஞ்சைபுளியம்பட்டி நகர அ.தி.மு.க. சார்பில் வார்டு எண் 12, 13 காந்தி நகர் பகுதி மற்றும் மார்க்கெட் பகுதியில் அ.தி.மு.க. கொடியேற்றும் விழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் 17 பூத்கள் அமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் மாதம்பாளையம் சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையேற்று பேசினார். பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ. முன்னிலையில் நகர செயலாளர் ஜி.கே.மூர்த்தி மற்றும் அவைத் தலைவர் மயில்சாமி வரவேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.பி. காளியப்பன் மற்றும் நகர, கழக பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பவானிசாகர் பேரூர் செயலாளர் துரைசாமி, துரைசாமி, எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மகளிர் அணியைச் சார்ந்த தமிழ்ச்செல்வி வசந்தாமணி, ஆனந்த பிரபா, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், வெற்றிவேல், வேலுச்சாமி, கே.ஜி.சதீஷ், புரட்சி நாகராஜ், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் பாபு பொன்னுச்சாமி பாலன் இளைஞர் அணி சக்தி சண்முகம். கண்ணன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சக்திவேல், மட்டன் குணசேகரன் கேபிள் சிவா வினோபாஜி, ராமசாமி, வசந்தா, மாணிக்கம், மார்க்கெட் கார்த்தி பழனிச்சாமி, சிவகுரு, சுப்பிரமணியன், சாமிநாதன், குமார், ஸ்ரீ பாலாஜி, மளிகை மூர்த்தி, ஜோதி மணியன், கிட்டுசாமி, செல்லதுரை, சுரேஷ், கண்ணன், பாபு மற்றும் பூத்கமிட்டி தலைவர்கள், வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் மற்றும் பூத் கமிட்டி படிவங்களை வழங்கினர். இதில் மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
- செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுக்காடு செல்லும் சாலையின் அருகே குடியிருப்பு பகுதி யில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக கிடந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மனைவி செல்வி (45) என்று தெரியவந்தது.
மேலும் போலீசாரின் விசாரணையில் செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது வீட்டை விட்டு செல்லும் செல்வி 2 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார். இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வி குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை.
இந்த நிலையில் தான் செல்வி பிணமாக மீட்கப்பட்டார் அவர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாக குளித்து கொண்டிருந்தார்.
- ஈரோடு போக்குவரத்து போலீசார் வாலிபர் பார்த்திபன் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் ஒன்றாக பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பு உள்ளது. இங்கு காந்திஜி சாலை, மீனாட்சி சுந்தரனார் சாலை, கச்சேரி வீதி சாலை, நேதாஜி சாலை, திருவேங்கட வீதி சாலை ஆகிய 5 சாலைகள் இணைகிறது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் ஜவுளிச்சந்தை, வணிக வளாகங்கள் இயங்கி வருவதால் எப்போதும் இங்கு மக்கள் நடமாட்டமும், வாகன போக்கு வரத்தும் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் நேற்று மதியம் வாகன போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர் சிக்னலில் வந்து நின்றார். பின்னர் மொபட்டில் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில் இருந்து மக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளிக்க தொடங்கினார். இதனை அவரை பின்தொடர்ந்து வந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சிக்னல் விழுந்தும் செல்லாமல் தொடர்ந்து குளித்து கொண்டிருந்தார்.
அவர் உடலில் ஊற்றும் தண்ணீர் அருகில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் மீது விழும்படியாக குளித்து கொண்டிருந்தார். பின்னர் அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் எச்சரிக்க அவர் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, நடுரோட்டில் குளித்த வாலிபர் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டைச் சேர்ந்த பார்த்திபன் (26) என்று தெரிய வந்தது. மேலும் இவர் இன்ஸ்டாகிரம் மூலம் அவரை பின்தொடர்பவர்கள் அளிக்கும் சவால்களை ஏற்று அதை நிறைவேற்றி வந்து உள்ளார். அதன்படி ஒருவர் 10 ரூபாய் தருகிறேன். நடுரோட்டில் குளிக்கும் படி சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்று பார்த்திபன் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடுரோட்டில் குளித்து, சவாலுக்கான ரூ.10-ஐயும் பெற்றார். பார்த்திபன் ஏற்கனவே இரவு நேரத்தில் நடுரோட்டில் தூங்குவது, பச்சை மீன்களை சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை செய்துள்ளார் என்று தெரிய வந்தது. நடுரோட்டில் வாலிபர் குளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.
இது குறித்து ஈரோடு போலீசாரும் விசாரணை நடத்தினர். இதையடுத்து நடுரோட்டில் குளித்த வாலிபர் பார்த்திபனை விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
ஈரோடு போக்குவரத்து போலீசார் வாலிபர் பார்த்திபன் மீது ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, விதிகளை மீறியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சச்சிதானந்தம் சமீபத்தில் 150 சரக்கு வாகனங்களை வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- சச்சிதானந்தம் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (65). இவர் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் குறிப்பிட்ட மதுபான நிறுவனங்களில் இருந்து மதுபாட்டில்களை கொண்டு வந்து குடோன்கள் மற்றும் கடைகளுக்கு சப்ளை செய்யும் ஒப்பந்தம் எடுத்து உள்ளார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் 150 சரக்கு வாகனங்களை வாங்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 26-ந் தேதி முதல் இவரது வீடு மற்றும் செங்கோடம்பாளையத்தில் உள்ள இவரது டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இன்று 4-வது நாளாகவும் அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சோதனை நடத்த வந்த அதிகாரிகளின் ஒரு பிரிவினர் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதுப்பற்றி வருமான வரித்துறை வட்டாரத்தில் கேட்டபோது வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்களை ஆய்வு செய்ய அழைத்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் எங்கு விசாரணை நடத்தப்படுகிறது? எந்த வங்கிக்கு அவரை அழைத்து செல்கிறார்கள் என்று எந்த விபரமும் வெளியிடவில்லை.
- பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட உள்ளனர்.
- 4 நாட்கள் தொடர்ந்து சோத னை நடத்த வேண்டும்.
ஈரோடு,
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றை ஒழிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய நடைமுறையை மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 4 நாட்கள் அரசின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளில் சோதனை நடத்தி பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்ய வேண்டும்.
மறுநாள் பிளாஸ்டிக் பொருட்களை (பைகளை), வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை ஆய்வு செய்து அறிந்து, அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். இதே போல 4 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதே போல் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் இந்த புதிய நடைமுறையை தொடங்கிய உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து,
- சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.
சென்னிமலை,
'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்ற ப்படும் சென்னி மலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தின மான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 67 வது வருட வைகாசி விசாக பெரு விழா, வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டா டப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 1-ந் தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து, 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைத்தல். மலை மீது முருகன் கோவிலில் 2-ந் தேதி 11 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலச ஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு முருகப்பெரு–மானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.
அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ந் தேதி காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்ப டுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலை மையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.
- கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர்.
கோபி,
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.
இதனால் கொடிவேரி அணையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருவார்கள்.
இந்த நிலையில் கோடை விடுமுறை மற்றும் வெயி லின் தாக்கத்தால் கடந்த 2 மாதமாக கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணி கள் அதிகளவில் வந்தனர். இதே போல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.
மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. பொது மக்கள் பலர் கார், வேன், இருசக்கர வாகன ங்களில் வந்திருந்தனர்.
மேலும் ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திரு ந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொதுமக்கள் கொடிவேரி பகுதி யில் குளிர்ந்த காற்று வீசியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் கடந்த 2 நாட்க ளில் மட்டும் 20 ஆயிரத்து க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முன்தினம் சனி க்கிழமை 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஞாயிற்றுக் கிழமை 14 ஆயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி தடுப்பணையில் குவிந்தனர். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.72 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
- பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 82.06 அடியாக உள்ளது.
- தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 82.06 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடியாக நீர் வரத்து குறைந்து விட்டது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக இதுவரை 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேப்போல் மழை ப்பொழிவு இல்லாத தால் மற்ற அணைகளின் நீர்மட்ட மும் குறைந்து வரு கிறது. இன்று காலை நிலவர ப்படி குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் 37.36 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.83 அடியாக உள்ளது. வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25 அடியாக உள்ளது.






