என் மலர்
ஈரோடு
- போதைப்பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது.
- வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொரு ள்கள் தடுப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலை மையில் நடை பெற்றது.
கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:
கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது பானம் விற்பனையில் ஈடுபடு வர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாரம் தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மது பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்த ப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாநிலஅளவில் தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, துணை போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 94429 00373 என்ற எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
தகவல் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு தொடர்பாக வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரப்பாளையம், ராயபாளையம், கடத்தூர் மற்றும் நம்பியூர் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் அரசு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து நேரம் கடந்து மது விற்பனை செய்தவர்கள் மீது 122 வழக்குகளும், மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மது பானம் எடுத்து வந்ததற்காக 7 வழக்குகளும் என மதுவிலக்கு தொடர்பாகசு மார் 129 குற்றவாளிகள் கண்டறியப்பட்டு 129 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களில் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, சப்-கலெக்டர் (பயிற்சி) பொன்மணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஸ்குமார், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மோகன சுந்தரம், உதவி ஆணையர் (கலால்) சிவக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் பகுதியில் மது போதையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கி விபத்துக்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பொதுமக்களும் போலீசாரிடம் இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் வேகமாக, மது போதையில் செல்வது குறித்து தெரிவித்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் பஸ் நிலையம், அண்ணா மடுவு, ஜிஹெச் கார்னர், தவிட்டுப் பாளையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடத்தில் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாளில் மட்டும் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
- தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
- 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு (குடும்ப கட்டுப்பாடு) விதிகள் 2001-ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, பட்டர்பிளை நைலான் வலைகளைக் கொண்டு நாய்கள் பிடித்து அறுவை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்று, மயக்க மருந்து செலுத்தி அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
வெறிநாய்க்கடி தடுப்பூசியும் போடப்படுகிறது. அதன் பின்பு பராமரிப்பு மையத்தில் வைத்து பராமரித்து காயங்கள்ஆறிய பிறகு மீண்டும் பிடித்த இடங்களிலேயே விடப்படுகிறது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இது வரை 298 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் கருத்தடை செய்யாத நாய்களை பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- தோனி படம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோ ஆகியவற்றினை பருத்தி துணி உருவாக்கியுள்ளார்.
- இது 2/17 பருத்தி காட்டன் நூலில் தயார் செய்துள்ளார்.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை 'சென்டெக்ஸ்' நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வடிவமைப்பாளராக உள்ள அப்புசாமி என்பவர் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தனது ஓய்வு நேரங்களில் தலைவர்களின் உருவங்களை துணிகளில் வடிவமைத்து சாதனை புரிந்து வருகிறார்.
அப்புசாமி இதற்கு முன் பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின், தோனி ஆகியோர் உருவங்களையும் பருத்தி துணியில் கைத்தறி நெசவின் மூலம் வடிவமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தற்போது ஐ.பி.எல். பிரிமியர் லீக் 16-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தோனி படம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோ ஆகிய வற்றினை கம்ப்யூட்டரில் வடிவமைத்து எலக்ட்ரானிக் ஜக்கார்டு மூலம் பருத்தி துணி உருவாக்கி அசத்தி உள்ளார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே தயார் செய்து துணி நெசவும் செய்து விட்டார்.
இதனை சென்னையில் நடக்கும் வெற்றி விழாவில் தோனிக்கு வாய்ப்பு கிடைத்தால் பரிசளிக்க ஆவலாக உள்ளார். இந்த பருந்தி துணியின் அகலம் 30 இன்ச், நீளம் 60 இன்ச் ஆகும். இது 2/17 பருத்தி காட்டன் நூலில் தயார் செய்துள்ளார். இதன் எடை 350 கிராம். துண்டு போல் உள்ளது.
- புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.
பவானி:
ஈரோடு வடக்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பவானி- மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கண்டன ஆர்ப்பாட்டம் பவானி உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் செங்கைரவி, பொருளாளர் வினோத் குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் சுடலை, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினர். பவானி-மேட்டூர் மெயின் ரோடு தற்போது அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி முடிக்கும் போது பவானி அருகில் உள்ள சிங்கம்பேட்டை பகுதியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளதை கண்டித்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் எனவும் கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.
இதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சுப்பிரமணி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தார்.
- வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர்குளம், ஜாமியா மஸ்ஜித் பின்புற வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). இவரது மனைவி பத்மா (51). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
மகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சுப்பிரமணி தறி பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சுப்பிரமணிக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பத்மா கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை கணவரை கண்டித்துள்ளார். எனினும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் சுப்பிரமணி கள்ளதொடர்பை தொடர்ந்து உள்ளார்.
மேலும் இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பிரமணி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தார்.
நேற்று இரவும் சுப்பிரமணி-பத்மா இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இரவு முழுவதும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். எனினும் ஆத்திரத்தில் இருந்த பத்மா இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து வந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினார்.
இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் பத்மா வீட்டின் கதவை பூட்டிவிட்டு நேராக வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பத்மாவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்.
- ரோட்டோரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
- வாகன ஓட்டிகள் புகை மூட்டத்தால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
சென்னிமலை:
சென்னிமலை-பெருந்துறை ரோடு சின்ன பிடாரியூர் பிரிவு அருகே ரோட்டோரத்தில் ஏராள மான குப்பைகள் கொட்ட ப்பட்டுள்ளது. இந்த குப்பை களில் அந்த வழியாக செல்பவர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் மேகமூட்டம் போல் புகை மூட்டம் ஏற்பட்டு சென்னி மலை-பெரு ந்துறை மெயின் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளா கிறார்கள்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த புகை மூட்டத்தால் பெரும் அவதிக்குள்ளா கிறார்கள். எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக காணப்படு கிறது.
அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும், தீ வைக்காமல் பார்த்து கொள்ளவும் முகாசி ப்பிடாரியூர் மற்றும் ஓட்ட ப்பாறை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன.
- திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நிர்வாக த்தின் முழு விவரங்கள் அடங்கிய பெயர் பலகைகள் பொது மக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டு ள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 225 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி களில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்கள் என தனித்தனியாக செயல்படு த்தப்பட்டு வருகிறது.
ஒரு சில திட்டங்கள் மாநில, மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஒவ்வொரு ஊராட்சிகளும் கடந்த நிதியாண்டில் என்னென்ன திட்டங்கள், எத்தனை மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
என்னெ ன்ன திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஊராட்சியின் மக்கள் தொகை எவ்வளவு. எத்தனை குடிநீர் இணைப்பு கள் உள்ளன.
குடியிருப்புகள் எத்தனை என ஊராட்சி குறித்த முழு தகவல்கள் அடங்கிய விபர ங்களை ஊராட்சி அலுவ லகத்திற்கு முன்பாக பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும்படியும் ஊராட்சி நிர்வாகம் வெளித்தன்மையோடு செயல்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் பெயர் பலகை வைக்க மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரும், கூடுதல் கலெக்டருமான மணீஷ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்திலுள்ள 225 ஊராட்சிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு நாளும் திட்ட பணிகள் திட்ட பயனாளர்கள் முழு விவரங்களையும் பதிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
- பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.
இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 955 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.
கீழ்பவானி பாசனத்தி ற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கழிவு நீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது.
- 5 வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களை முறைப்படுத்த மாநகராட்சி சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது.
அதன்படி, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 5 வாகனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பம் மாநகராட்சி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. தொடர்ந்து விண்ண ப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
எனவே இதுவரை விண்ணப்பிக்காத கழிவு நீர் அகற்றும் வாகன உரிமை யாளர்கள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து வாகன உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.
தவறும்பட்சத்தில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- வாகனங்கள் பழுதாகி நின்று கடும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓட்டுநர் உரிமத்தை சரி பார்த்து அனுப்ப வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இந்த சாலை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் டாரஸ் லாரிகள், பாரங்கள் ஏற்றி வரும் லாரிகள் ஆசனூர் மற்றும் மாதேஸ்வரன் கோவில் மலைப்பாதை வழியாக அனுமதிக்க ப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தியூர்- பர்கூர் மலைப்பாதை வழியாக அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் லாரிகள் வந்து செல்கிறது.
இந்த நிலையில் இந்த மலைப்பாதை வழியாக வரும் லாரிகள், சரக்கு வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சாலையின் நடுவே அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு இந்த வழித்தடம் புதியதாக இருப்பதால் வளைவுகள் முக்கிய இடங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்வதும் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 30 நாட்களில் மட்டும் நாமக்கலில் இருந்து மைசூருக்கு செல்வதற்கு சோப்பு பாரம் ஏற்றி வந்த லாரி, கல்பாரம் ஏற்றி வந்த லாரி, நாமக்கலில் இருந்து மைசூருக்கு செல்வதற்காக பாரங்கள் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே பழுதாகி நின்று விடுவது அடிக்கடி நடக்கிறது. இதே போல் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகி நின்று கடும் போக்கு வரத்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரோட்டில் பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட உள்ள சோதனைச் சாவடி பகுதி களில் வளைவுகள் அதிகமாக உள்ளது.
எனவே வாகன ஓட்டிகள் வேக த்தை கட்டுப்படுத்தி மெதுவாக வாகனத்தை இயக்கிச் செல்லுங்கள் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் மது போதையில் இருக்கின்றார்களா? என்று மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வரட்டு பள்ளம் சோதனை சாவடியில் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுப்பப்படுகிறது.
சோதனை செய்யும் போது வாகன ஒட்டிகளுக்கு அறிவுரை கூறி மலை பாதையில் மெதுவாக செல்லுங்கள். பின்னால் வரும் இரு சக்கர வாக னத்திற்கு வழி விடுங்கள். வளைவுகளில் ஒலிபெரு க்கியை (ஹாரன்)அடித்து வளைவில் வருபவர்களுக்கு தெரியும்படி செய்யுங்கள். வளைவுகளில் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லாதீர்கள் உள்ளிட்ட அறிவுரைகளை எடுத்துக் கூறிஅனுப்ப வேண்டும்.
மேலும் வாகன டிரை வர்களின் ஓட்டுநர் உரிம த்தை சரி பார்த்து அனுப்ப வேண்டும். லாரியில் எத்தனை டன் அளவிற்கு ஏற்றி செல்ல வேண்டுமோ அந்த அளவிற்கு ஏற்றி செல்வதற்கு உண்டான இடை நிலையத்தில் சீட்டு களை வாகனத்தில் வைத்திருக்கிறார்களா என்பதையும் பார்த்து மலைப்பாதையின் மேலே அனுமதிக்க வேண்டும் என்று தன்னல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது போன்ற நடவடிக்கை கள் எடுத்தால் விபத்துகளும் குறையும் என்றும், பழுதாகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
- இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கோட்டை வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா திருக்கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தொடந்து மேல் வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து வரும் ஜுன் மாதம் 3-ந் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. இந்த வைகாசி தேர்த்திரு விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 24-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை விருஷப யாகம், த்வஜ பட பூஜை, தேவ ரக்ஷாபந்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மேல் யாக சாலை பூஜை தொடக்கம், நவ சந்தி, இந்திர விமா னத்தில் சோமாஸ்கந்தர் சோடச உபசார பூஜையுடன் ரதவீதி பிரதட்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. சரஸ்வதி எம்.எல்.ஏ., துணை மேயர் வெல்வராஜ், இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், செயல் அலுவலர் கயல்விழி, கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் உள்பட பலர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர் செல்வம் பார்க், மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக மீண்டும் தேர் இன்று மாலை கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது.
தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.






