பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக சரிந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக சரிந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

இன்று காலை நிலவ ரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 955 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது.

கீழ்பவானி பாசனத்தி ற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com