என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amazing"

    • தோனி படம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோ ஆகியவற்றினை பருத்தி துணி உருவாக்கியுள்ளார்.
    • இது 2/17 பருத்தி காட்டன் நூலில் தயார் செய்துள்ளார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம், சென்னிமலை 'சென்டெக்ஸ்' நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வடிவமைப்பாளராக உள்ள அப்புசாமி என்பவர் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தனது ஓய்வு நேரங்களில் தலைவர்களின் உருவங்களை துணிகளில் வடிவமைத்து சாதனை புரிந்து வருகிறார்.

    அப்புசாமி இதற்கு முன் பத்மஸ்ரீ எம்.பி. நாச்சிமுத்து, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின், தோனி ஆகியோர் உருவங்களையும் பருத்தி துணியில் கைத்தறி நெசவின் மூலம் வடிவமைத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தற்போது ஐ.பி.எல். பிரிமியர் லீக் 16-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தோனி படம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோ ஆகிய வற்றினை கம்ப்யூட்டரில் வடிவமைத்து எலக்ட்ரானிக் ஜக்கார்டு மூலம் பருத்தி துணி உருவாக்கி அசத்தி உள்ளார்.

    இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் கண்டிப்பாக இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே தயார் செய்து துணி நெசவும் செய்து விட்டார்.

    இதனை சென்னையில் நடக்கும் வெற்றி விழாவில் தோனிக்கு வாய்ப்பு கிடைத்தால் பரிசளிக்க ஆவலாக உள்ளார். இந்த பருந்தி துணியின் அகலம் 30 இன்ச், நீளம் 60 இன்ச் ஆகும். இது 2/17 பருத்தி காட்டன் நூலில் தயார் செய்துள்ளார். இதன் எடை 350 கிராம். துண்டு போல் உள்ளது.

    ×