மொட்டை மாடியில் பிணமாக கிடந்த பெண்

பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மொட்டை மாடியில் பிணமாக கிடந்த பெண்
Published on

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுக்காடு செல்லும் சாலையின் அருகே குடியிருப்பு பகுதி யில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிணமாக கிடந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மனைவி செல்வி (45) என்று தெரியவந்தது.

மேலும் போலீசாரின் விசாரணையில் செல்விக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வப்போது வீட்டை விட்டு செல்லும் செல்வி 2 நாட்கள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார். இதனால் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வி குறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் செய்யவில்லை.

இந்த நிலையில் தான் செல்வி பிணமாக மீட்கப்பட்டார் அவர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com