என் மலர்
நீங்கள் தேடியது "Municipal health"
- பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட உள்ளனர்.
- 4 நாட்கள் தொடர்ந்து சோத னை நடத்த வேண்டும்.
ஈரோடு,
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இவற்றை ஒழிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய நடைமுறையை மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறியதாவது:-
ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 4 நாட்கள் அரசின் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஈடுபட உள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளில் சோதனை நடத்தி பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்ய வேண்டும்.
மறுநாள் பிளாஸ்டிக் பொருட்களை (பைகளை), வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை ஆய்வு செய்து அறிந்து, அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். இதே போல 4 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதே போல் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் இந்த புதிய நடைமுறையை தொடங்கிய உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.






