என் மலர்
ஈரோடு
- அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.
- எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தண்ணீரில் அடித்துச் சென்றனர்.
ஆப்பக்கூடல்,
அந்தியூர் அடுத்த புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (45), திருமணமாகி மனைவி மாகாளி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.அதே புது மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (46) திருமணமாகி ஜோதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இருவரும் அந்தியூர் பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்து வந்தனர், இந்நிலையில் சின்னதுரை, மோகன்ராஜ் மற்றும்அதே பகுதியை சேர்ந்த ரவி ஆகிய மூவரும் நண்பர்கள் ஆவர்.இந்த மூன்று பேரும் நேற்று மதியம் அந்தியூர் அடுத்த அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.
மூன்று பேரில் ரவி என்பவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் இறங்கி குளிக்காமல் கரையிலேயே இருந்து உள்ளார்.அதனால் சின்னத்துரை மற்றும் மோகன்ராஜ் இருவரும் மட்டுமே ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த இருவரும், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய நிலையில் தண்ணீரில் அடித்துச் சென்றனர்.
கரையில் இருந்து ரவி என்பவர் சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க சென்ற நண்பர்கள் இருவரை காணாமல் தேடியுள்ளார்.உடனே அதிர்ச்சி அடைந்த ரவி ஆற்றங்கரையில் இருந்து வெளியேறி வந்து அந்தியூர் தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் தீயணைப்புத்துறை வீரர்கள் நேற்று மாலை ஆற்றில் இறங்கி தேடிய நிலையில் சின்னத்துரை என்பவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு ஆனதை தொடர்ந்து தேடுதல் பணியை நிறுத்தி வைக்கப்பட்டது, இன்று காலை ஆற்றில் தேடுதல் பணியை தொடங்கிய தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை தேடி வந்தனர்.சில மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜை ஆற்றில் சடலமாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.
- காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரிய கள்ளிப்பட்டி கோட்டை புதூரை சேர்ந்த வர் காளியப்பன்(70). இவர், அவரது மகன் மயில்சாமி பராமரிப்பில் இருந்து கொண்டு, கால்நடைகளை வளர்த்து வந்தார்.
கடந்த மாதம் 28-ந் தேதி காளியப்பன் அவரது 2 மாடு கன்றுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். அப்போது, கன்று வேகமாக கயிறுடன் இழுத்து சென்றதில், காளியப்பன் கீழே விழுந்து நெஞ்சு, நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காளியப்பன் மீட்கப்பட்டு அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நேற்று பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளது
- வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணை க்க வேண்டியதும் அவசியமாகும்.
ஈரோடு,
பிரதமரின் கிசான் சம்மான் நிதி (பி.எம்.கிசான்) திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
திட்டம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் விண்ண ப்பித்த பெரும்பா லான விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன்பின்னா் திட்டத்தை ஒழுங்கு படுத்தும் வகையில்,
ஆதார் மூலம் விப ரங்களை புதுபிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆதார் மூலம் புதுப்பித்தால் மட்டுமே பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த (14 வது) தவணைத்தொகை பெற முடியும் என மத்திய அரசு தெளிவாக விளக்கி உள்ளது.
மேலும் பிரதமரின் கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது 10,300 விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாமலும், 8000 விவசாயிகள் வங்கி கணக்கு டன் ஆதார் எண்ணை இணைக்காமலும் உள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கு வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இது குறித்து வேளா ண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கூறியதாவது:- பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 வேளாண் இடுபொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத்தொகை ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமெனில் ஆதார் மூலம் விபரங்களை புதுபிக்க வேண்டும். மேலும் பிரதமரின் கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை செய்தால் மட்டுமே அடுத்த தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் ஆதார் விபரங்களை இணைக்காமல் உள்ளனர். எனவே இதுவரை பதிவை புதுப்பிக்காத விவசாயிகள் உடனடியாக தங்களது ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.
ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை ஏற்கனவே இணைத்துள்ள விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களின் ஆதார் எண் விவரத்தினை உள்ளீடு செய்தால், ஓடிபி எண், தங்களது செல்பேசிக்கு அனுப்பப்படும். அந்த ஓடிபி எண்ணை உள்ளீடு செய்து ஆதார் விவரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இதுநாள் வரை ஆதார் எண்ணுடன் செல்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று பிரதமரின் கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இதுவரை பிரதமரின் கிசான் பதிவை புதுப்பிக்கா தவர்கள தங்கள் பகுதி அஞ்சல் அலுவலகம் மூல மும் ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்து விவரங்களை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
- காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது.
ஈரோடு,
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 163 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.65 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.
இதைப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.92அடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிட த்தக்கது.
- மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
- பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன பிரதாஸ். இவர் அந்தியூரில் மளிகை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பிரீத்திபா (16) என்ற மகள் உள்ளார்.
பிரீத்திபா 10 -ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தர்மபுரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு பிரீத்திபா அந்தியூர் அருகே மைக்கேல் பாளையத்தில் உள்ள தனது தாய்- தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று பிரீத்திபாவை அவரது தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கினார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பிரீத்திபா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரீத்திபா இது போல் ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருந்தார். தற்போது 2-வது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்து விட்டார்.
- மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.
- விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பி.மேட்டுப்பாளையம் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி(37). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜீவா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனா். வேலுசாமிக்கு மதுப்பழக்கம் உள்ளது.
இதனால், வேலுசாமி குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் மது குடித்து வந்துள்ளார். வேலுசாமி கடந்த மாதம் 29ம் தேதி அவரது மனைவி ஜீவா வீட்டில் மகளிர் குழுவுக்கு செலுத்த வைத்திருந்த பணத்தை எடுத்து வேலுசாமி மது குடித்துள்ளார்.
இதையடுத்து கணவன்-மனைவிக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த வேலுசாமி வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது மனைவி ஜோதி, அக்கம்பக்கத்தினர் உதவி யுடன் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.
- தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
சென்னிமலை,
சென்னிமலை அருகே ஈங்கூரில் இரும்பு உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சத்தியமூர்த்தி (47) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிளை நிறுவனத்தில் இருந்து ரூ.23 லட்சம் பணத்தை காரில் எடுத்து சென்றார்.
அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்தி சென்றனர். இதையடுத்து காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து சென்னி மலை தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி, காமராஜர் ரோட்டை சேர்ந்த சுரேஷ் (27), என்பரை போலீசார் கைது செய்தார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்ய ப்பட்டது.
இந்த வழக்கில் தொட ர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி அருகே கள்ளர் தெரு மனோகர் (29), நவநீதன் (27), இளையராஜா (31), மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த அலெக்சாண்டர் (32) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடை த்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய புது க்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்வரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தினை இது வரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
- அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஈரோடு,
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடைகள் வார கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.
இந்த ஜவுளி சந்தை உலகப் புகழ்பெற்றது. இதில் மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். மற்ற இடங்களை காட்டிலும் இங்கு விலை குறைவாக இருப்பதால் இங்கு எப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூட்டம் அலைமோதும். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முதல் வழக்கம் போல் ஜவுளி வார சந்தை கூடியது. சென்ட்ரல் தியேட்டர் அருகே உள்ள வளாகத்திலும் வாரச்சந்தை கூடியது. இதே போல் அசோகபுரம் பகுதிகளிலும் ஜவுளி சந்தை கூடியது.
ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தையில் குவிந்தனர். கேரளாவில் இருந்து குறைந்த அளவிலும் , தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரம் இருப்பதால் பள்ளி சீருடைகள் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதே போல் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டன் சம்பந்தமான துணிகள் விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக ஆந்திரா , கர்நாடகா மாநில வியாபாரிகள் காட்டன் துணிகளை மொத்தமாக வாங்கி சென்ற னர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றது. இதேப்போல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதனால் இன்று சில்லரை விற்பனையும் 45 சதவீதம் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
குறிப்பாக காட்டன் துணிகள் வேஷ்டிகள் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் பள்ளி குழந்தைகளின் லன்ச் டவல் விற்பனையும் அதிகமாக இருந்ததாக தெரிவித்தனர்.
- சிறுத்தை ஆட்டுக்குட்டியை இழுத்து சென்ற அடையாளம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- சிறுத்தையால் தங்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகேயுள்ள அரக்கன்கோட்டை, செங்காட்டு தோட்டம், மோதூர் பிரிவு வனச்சாலை செல்லும் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (42). இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடுகள், மாடுகள் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கால்நடைகளுக்கு உணவு கொடுக்க வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த போது 5 ஆடுகளில் ஆறுமாதம் ஆன ஒரு ஆட்டுக்குட்டியை காணவில்லை.
உடனடியாக நாகேந்திரன் அப்பகுதியில் தேடி பார்த்து கொண்டே சென்ற போது அந்த வழியாக சிறுத்தை ஆட்டுக்குட்டியை இழுத்து சென்ற அடையாளம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே நாகேந்திரன் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
நாகேந்திரன் வீட்டில் இருந்து வனப்பகுதியை நோக்கி செல்லும் சாலையில் வனத்துறையினர் ஆய்வு செய்த போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஆடு கடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது.
ஆட்டுக்குட்டியை கடித்து கொன்ற அடையாளங்களை வைத்து சிறுத்தை தான் ஆட்டுக்குட்டியை கொன்றதாக வனத்துறையினர் நாகேந்திரனிடம் தெரிவித்தனர்.
மேலும் நாகேந்திரன் வீட்டில் ஆடு மாடுகள் உள்ள இடத்தின் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்திய வனத்துறையினர், கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஆட்டுக்குட்டியை கொன்ற நிலையில் சிறுத்தையால் தங்களுக்கும் ஆபத்து வந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மதன்குமார், மவுலி சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் மதன்குமார் டி.என்.பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் மவுலி சங்கர் (18) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மூர்த்தி அவரது மனைவி, மூத்த மகன் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். கல்லூரி விடுமுறை என்பதால் மவுலிசங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்நிலையில் மாலை வேலை முடிந்து மதன்குமார் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து மதன்குமார் மாடிப்படி வழியாக ஏறி கீழே இறங்கி பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மவுலிசங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலி சங்கர் எதற்காக? தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.
- இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (56). இவரது மனைவி சாந்தி(52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பொதிகை நகரில், ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜென்டுகள் தேவை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அதைப்பதற்காக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த வக்கீல் அரசபிரபாகரன் இவர்களை அணுகி உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன், தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதனை நம்பி அரசபிரபாகரன் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்து 5 கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ்-சாந்தியிடம் கொடுத்துள்ளனர்.
மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார், ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரின் முன்புறம் ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வந்தது.
- தொடர்ந்து காரின் பேனட்டை திறந்து புகை வந்த காரணத்தை அறிய முயன்றனர்.
ஈரோடு,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள காசிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேர்மன் ராஜ். இவருக்கு சொந்தமான காரை அவரது டிரைவர் ராஜலிங்கம் என்பவர் இன்று அவிநாசியில் இருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையை நோக்கி ஓட்டி வந்தார். ராஜலிங்கத்துடன் 4 பேர் காரில் இருந்தனர்.
அவர்கள் இன்று மதியம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற போது திடீரென காரின் முன்புறம் ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வந்தது.
உடனடியாக டிரைவர் ராஜலிங்கமும் அவருடன் வந்திருந்த மற்ற 4 பேரும் காரில் இருந்து இறங்கினர். தொடர்ந்து காரின் பேனட்டை திறந்து புகை வந்த காரணத்தை அறிய முயன்றனர்.
ஆனால், அதற்குள் காரில் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. சுங்க சாவடி வரிசையில் காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பதற்றத்துடன் அப்புற ப்படுத்தி னர். தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெருந்துறையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஏராளமான வாகனங்கள் சென்று வரும் சுங்க சாவடியில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






