search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
    X

    கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

    • காரின் முன்புறம் ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வந்தது.
    • தொடர்ந்து காரின் பேனட்டை திறந்து புகை வந்த காரணத்தை அறிய முயன்றனர்.

    ஈரோடு,

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள காசிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சேர்மன் ராஜ். இவருக்கு சொந்தமான காரை அவரது டிரைவர் ராஜலிங்கம் என்பவர் இன்று அவிநாசியில் இருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறையை நோக்கி ஓட்டி வந்தார். ராஜலிங்கத்துடன் 4 பேர் காரில் இருந்தனர்.

    அவர்கள் இன்று மதியம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற போது திடீரென காரின் முன்புறம் ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வந்தது.

    உடனடியாக டிரைவர் ராஜலிங்கமும் அவருடன் வந்திருந்த மற்ற 4 பேரும் காரில் இருந்து இறங்கினர். தொடர்ந்து காரின் பேனட்டை திறந்து புகை வந்த காரணத்தை அறிய முயன்றனர்.

    ஆனால், அதற்குள் காரில் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. சுங்க சாவடி வரிசையில் காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பதற்றத்துடன் அப்புற ப்படுத்தி னர். தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பெருந்துறையில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    ஏராளமான வாகனங்கள் சென்று வரும் சுங்க சாவடியில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×