ஊழியரை காரில் கடத்தி பணம் பறித்த மேலும் ஒருவர் கைது

காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
ஊழியரை காரில் கடத்தி பணம் பறித்த மேலும் ஒருவர் கைது
Published on

சென்னிமலை,

சென்னிமலை அருகே ஈங்கூரில் இரும்பு உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சத்தியமூர்த்தி (47) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிளை நிறுவனத்தில் இருந்து ரூ.23 லட்சம் பணத்தை காரில் எடுத்து சென்றார்.

அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்தி சென்றனர். இதையடுத்து காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து சென்னி மலை தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி, காமராஜர் ரோட்டை சேர்ந்த சுரேஷ் (27), என்பரை போலீசார் கைது செய்தார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்ய ப்பட்டது.

இந்த வழக்கில் தொட ர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி அருகே கள்ளர் தெரு மனோகர் (29), நவநீதன் (27), இளையராஜா (31), மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த அலெக்சாண்டர் (32) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடை த்தனர்.

இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய புது க்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்வரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தினை இது வரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com