ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்

மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது.
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
Published on

ஈரோடு,

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 163 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.65 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.

இதைப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.92அடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிட த்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com