என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி சாலை யோரம் அந்த மின் கம்பங்களை நட்டி மின் இணைப்புகள் கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி க்குட்பட்ட வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் திண்டல் செல்லும் சாலை யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விரிவாக்க பணி நடந்தது.

    வில்லரசம் பட்டி நால்ரோடு பகுதி முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இந்த பகுதி வழியாக சரக்கு வாகனங்கள் ஈரோடு மாநகர பகுதிக்குள் வராமல் ஈரோடு- பெருந்துறை ரோடு, நசியனூர் ரோட்டில் இருந்து வில்லர சம்பட்டி நால்ரோடு வழி யாக சித்தோடு, பவானி வழியாக கோபி சத்திய மங்கலம் செல்கின்றன.

    இதேபோல் அங்கிருந்து வரும் வாகனங்கள் மாநகர் பகுதிக்குள் செல்லாமல் கனிராவுத்தர் குளம் வழி யாக வில்லரசம்பட்டி நால்ரோடு வந்து பெருந்துறை ரோடு வந்து திண்டல் வழியாக பெருந்துறை கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்தப் பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.

    இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக ரோடுகள் அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது. அவ்வாறு விரிவாகப் பணியின் போது மின் கம்பங்கள் அகற்றப்படாமல் மின்கம்பங்களை சுற்றி தார்ரோடு அமைக்க ப்பட்டது. இவ்வாறு அந்த பகுதியில் 5-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அகற்ற ப்படாமல் மின்கம்பங்களை தார் ரோடு அமைக்க ப்பட்டது.

    இதனால் இரவு நேரங்க ளில் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களில் மோதி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இது தொடர்பான செய்தி மாலைமலர் நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது.

    இதனையடுத்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்ட னர். இதனை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்களை அகற்றி சாலை யோரம் அந்த மின் கம்பங்களை நட்டி மின் இணைப்புகள் கொடுத்தனர்.

    போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய அனைத்து மின்கம்பங்களையும் அந்த இடத்திலிருந்து அகற்றிவிட்டு சாலையோரம் நட்டி மின் இணைப்புகள் கொடுத்து உள்ளனர். மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரி வித்துள்ளனர்.

    • பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.
    • பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டு களில் துப்புரவு பணி செய்வதில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சரஸ்வதி விஸ்வநாதன். அ.தி.மு.க. கவுன்சிலரான இவரது பகுதியில் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் தலைமையில் 1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பை களை அப்பு றப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.

    • சித்த மருத்துவ பிரிவின் அருகில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
    • 30-க்கும் மேற்பட்ட மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பவானி:

    பவானி- அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவ மனை வளாகத்தில் சித்த மருத்துவப் பிரிவு உள்ளது.

    இந்த சித்த மருத்துவப் பிரிவில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சித்தா டாக்டர்.கண்ணுச்சாமி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

    அதேபோல் இந்த சித்த மருத்துவ பிரிவின் அருகில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை தோட்டத்தில் உலக சுற்று ச்சூழல் தினத்தை முன்னிட்டு 30-க்கும் மேற்பட்ட மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதில் டாக்டர் கண்ணு சாமி, உதவி கோட்டப் பொறியாளர் (ஓய்வு) ஆறு முகம், பவானி ஜமக்காளத் தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த வாசுதேவன், மருந்தாளுநர் ரைசூல் இஸ்லாம் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு மூலிகை டீ வழங்கப்பட்டது. 

    • லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் வசிக்கும் வீரமணி என்பவர் பவானி போலீசாரிடம் தன்னிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறி பெண் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் நானும் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன்.

    ஆனால் இதுவரை எந்த பரிசும் விழவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்று வழங்கினார்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் பவானி வர்ணபுரம் பகுதியில் வசிக்கும் சகுந்தலா (47) என்ற பெண் அனுமதியின்றி வெள்ளை தாளில் எண்கள் எழுதி பரிசு விழும் என நம்ப வைத்து லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.22 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 697 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடி, கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.
    • பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    பு.புளியம்பட்டி:

    தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது.இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.மாணவர்கள் உற்சா கத்துடன் வகுப்பறைக்கு சென்றனர்.

    இதையொட்டி புளி யம்பட்டி, பனையம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் மாணவர்களை பள்ளியில் சேர்க்க வந்திருந்திருந்தனர்.

    மாணவர்கள் சேர்க்கைக்காக பெற்றோர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளியில் சேர்த்தனர்.

    இதையடுத்து பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ, மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

    • ரயான் மற்றும் காட்டன் துணிகளின் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
    • கடந்த 6 மாதங்களாக தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்தி மூலம் பெரும்பாலான விசைத்தறிவுகள் காக்கப்பட்டு வந்தன.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறி மற்றும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தானியங்கி தறிகளில் ரயான் மற்றும் காட்டன் துணி ஒரு நாளைக்கு 1.5 கோடி மீட்டருக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 6 மாதங்களாக இலவச வேட்டி சேலை உற்பத்தி காரணமாக ரயான் துணி உற்பத்தி குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் ரயான் துணிக்கு பதிலாக பாலிஸ்டர், நைலான் போன்ற துணிகள் உற்பத்தி செய்து பெருநகர சந்தைகளில் விற்பனை செய்து வருவதால் ரயான் தேவை குறைந்து விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த மாதத்தில் 120 கிராம் எடை கொண்ட ரயான் துணியின் ஒரு மீட்டர் விலை ரூ.25.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 23.25 -க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    அதேபோல் 140 கிராம் துணியின் விலை கடந்த மாதத்தில் ரூ.30.50 பைசா இருந்தது. தற்போது படிப்படியாக குறைந்து ரூ.28.25 -க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் ரயான் உற்பத்தி செய்த விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. ஆனால் அதே வேளையில் ரயான் நூல் விலையானது கிலோவுக்கு ரூ.4 முதல் 6 வரை உயர்ந்துள்ளது.

    ரயான் மற்றும் காட்டன் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளதால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகின்றனர். எனவே ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    ரயான் மற்றும் காட்டன் துணிகளின் விலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது . ஆனால் அதே வேளையில் நூல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வேறு வழி இன்றி உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாரத்திற்கு 13 ஷிப்ட் நடத்தப்படும் விசைத்தறிக்கூடங்கள் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உற்பத்தியை குறைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு வாரத்திற்கு ரூ. 3 ஆயிரம் சம்பளம் வாங்கும் விசைத்தறி தொழிலாளிகள் உற்பத்தி குறைப்பு மூலம் குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை சம்பளத்தை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதங்களாக தமிழக அரசு இலவச வேட்டி சேலை உற்பத்தி மூலம் பெரும்பாலான விசைத்தறிவுகள் காக்கப்பட்டு வந்தன. தற்போது வேட்டி- சேலை உற்பத்தி முடிவு அடைந்த நிலையில் காட்டன் மற்றும் ரயான் துணி உற்பத்தி நோக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    ஆனால் தற்போது ரயான் துணியின் விலை குறைந்த காரணத்தால் நஷ்டத்திற்கு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே விசைத்தறியாளர்களை காப்பாற்றும் வகையில் அனைத்து துறையின் சீருடைகளும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல மத்திய அரசு ஜவுளி ஏற்றுமதிக்கு வழிவகை செய்தால் மட்டுமே விசைத்தறி தொழிலை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    • ஊர் பொது குடிநீர் குழாய் பழுதாகி சரியாக குடிநீர் வினியோகம் இல்லை.
    • சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழி வகை செய்ய வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.

    இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த அவல்பூந்துறை, பூந்துறை சேமூர் பஞ்சா யத்தை சேர்ந்த 9-வது வார்டு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் மேற்கண்ட பகுதியில் 20 குடும்பங்களுடன் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக ஊர் பொது குடிநீர் குழாய் பழுதாகி சரியாக குடிநீர் வினியோகம் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    பழுதான குடிநீர் குழாயை சரி செய்ய வலி யுறுத்தி யூனியன் அலு வலகத்திலும் மனு கொடு த்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.

    எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு பழுதான குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதேப்போல் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒரு ங்கிணைப்பாளர், மகளிர் பாசறை சீதாலட்சுமி தலை மையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடு த்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக அறி வுறுத்து கிறோம். சமுதாய த்தில் நடக்கும் பல இழிவான செயல்களுக்கு , பண்பாட்டு சீரழிவிற்கும் மூல காரணமாக அமைவது மது தான்.

    எனவே நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் குடும்பங்களை சீரழிக்கும் அயல்நாட்டு மது வகைகளை விற்கும் தமிழக அரசு உடனடியாக அதை கைவிட்டு நம்முடைய பாரம்பரிய பானங்கள், தென்னங்கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    ஈரோடு, 

    தமிழகத்தில் சமீபத்தில் சிறு,குறு தொழில் நிறு வனங்களுக்கு மின் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் எம்.பி. அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் விடி யல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் வைப்பு தொகை 3 மடங்கு உயர்வு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சில ஆண்டு கால மாகவே கொரோனா தொற்று, மழை,டெங்கு போன்ற பல்வேறு சிர மங்களில் உள்ள மக்களை தமிழக அரசு மென்மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது.

    ஆகவே அரசு பொது மக்கள் மீது சுமத்தியுள்ள சுமைகளை மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி.சந்திரசேகர், மாநில துணைத் தலைவர் ஆறு முகம், தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம், கதிர்வேலு, ரபீக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • 2 முறை இந்த கண க்கெடுப்பு பணி நடை பெறுகிறது.
    • 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

    டி.என்.பாளையம், 

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டி.என்பாளையம் வன ப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இங்கு இன்று முதல் 6 நாட்கள் நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு மழைக்கு முந்தைய கண க்கெடுப்பு, மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு என 2 முறை இந்த கணக்கெடுப்பு பணி நடை பெறுகிறது.

    இன்று முதல் நாளில் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டெருமை, கடமான் உள்ளிட்ட பெரிய தாவர உண்ணிகளின் எச்சங்கள், கால் தடங்களும், 2-ம் நாளில் நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் என மாற்றி மாற்றி 6 நாட்கள் இவ்வாறு கணக்கெடுப்பு செய்து புலிகளின் எண்ணிக்கை கணிக்கப்படும்.

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், பங்களாப்புதூர், கொங்க ர்பாளையம், விளா ங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் கிழக்கு என 7 காவல் சுற்று பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணியை டி.என்.பாளையம் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்று தான் திறக்கப்பட்டது.
    • 2 மாதத்துக்கும் மேலாக கொடிவேரி அணை பகுதிகளை கட்டியது.

    கோபி, 

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ளது கொடிவேரி அணை. இங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்ற ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து சென்றனர். மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக கடந்த 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் இன்று தான் திறக்கப்பட்டது.

    தமிழக்தில் பள்ளிகளுக்கு கூடுதலாக 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் நேற்று வரை கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். இதனால் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கொடிவேரி அணை பகுதி களை கட்டியது. மீன்கள் விற்பனை அதிகளவில் இருந்தது.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி கொடிவேரி அணை வெறிச்சோடியது. மீண்டும் விடுமுறை நாளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்.

    ×