லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது

லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது
Published on

பவானி:

பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் வசிக்கும் வீரமணி என்பவர் பவானி போலீசாரிடம் தன்னிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறி பெண் ஒருவர் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் நானும் அந்த லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தேன்.

ஆனால் இதுவரை எந்த பரிசும் விழவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்று வழங்கினார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பவானி போலீசார் பவானி வர்ணபுரம் பகுதியில் வசிக்கும் சகுந்தலா (47) என்ற பெண் அனுமதியின்றி வெள்ளை தாளில் எண்கள் எழுதி பரிசு விழும் என நம்ப வைத்து லாட்டரி விற்பனை செய்தற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து 2 வெள்ளை துண்டு கேரளா லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com