என் மலர்tooltip icon

    ஈரோடு

    விளாங்கோம்பை மலைவாழ் கிராமத்தை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா அலு வலர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி டி.என்.பாளை யம் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கொங்கர்பா ளையம் ஊராட்சி பழங்குடி யினர் வாழும் விளாங்கோ ம்பை மலைவாழ் கிராமத்தை மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி த்துறை, வனத்துறை, கல்வி த்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலு வலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விளாங்கோம்பை பகுதி யில் சுமார் 47 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பட்டா பெற்ற 36 குடும்பத்தினருக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தலா ரூ.3 லட்சம் மதிப்பீ ட்டில் முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டு உள்ளது.

    இப்பகுதியில் உள்ள 31 மாணவ, மாணவிகளில் 21 பேர் வினோபா நகர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியிலும், 10 பேர் கொங்கர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யிலும் பயின்று வருகின்ற னர். மேலும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எளிதில் சென்று வர வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இங்குள்ள பொது மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வாய்ப்பில் கல்கரை அமைத்தல் மற்றும் குட்டை சீரமைத்தல் பணிகளோடு வேளாண்மை - உழவர் நல த்துறை, தோட்டக்கலை த்துறை, வேளாண் பொறி யியல் துறை சார்பில் மக்கா ச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்காக மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு த்துறை சார்பில் நடமாடும் வாகனம் மூலம் ரேசன் பொருட்கள் அப்பகுதி மக்களுக்கு நேரடி யாக விநியோகம் செய்ய ப்பட்டு வருகின்றன.

    மேலும், பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று க்கொண்ட கலெக்டர் அவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, மின்சாரம், பள்ளி கட்டிட ங்கள் அமைத்தல், வேளாண் பயன்பாட்டி ற்கான ஆழ்து ளை கிணறு மற்றும் அகழிக்கு ழிகள் கூடுதலாக அமைத்து தருதல் உள்ளிட்ட கோரிக்கை களை முழுமை யாக நிறை வேற்றிட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளி ட்ட சான்றிதழ்களை விரை ந்து வழங்கிடவும் மற்றும் ஆதார் சேவையை அளித்தி டவும் கோபி செட்டி பாளையம் தாசி ல்தாரு க்கு கலெக்டர் உத்தர விட்டார்.தொடர்ந்து கலெக்டர் விளாங்கோம்பை பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கொங்க ர்பா ளையம் ஆதிதிராவிடர் காலனியில் தொகுப்பு வீடுகள் கட்ட ப்பட்டு வரும் பணி, கொங்க ர்பாளையம் பகுதி விவசாயி சக்திவேல் முத்துசாமி சுமார் 1.44 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,88,023 அரசு மானி யத்துடன் மக்காச்சோளம் பயிரிட ப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு பயிரி டும் முறைகள் குறித்தும் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குழந்தைராஜன், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் ரங்கநாதன், டி.என்பாளை யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, சாந்தி, கோபிசெட்டி பாளை யம் தாசில்தார் ருத்திரசாமி, வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ராஜசேகரை மீண்டும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பணம் மற்ற யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் சத்தியமூர்த்தி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி மர்ம நபர்கள் இவரை காருடன் கடத்தி சென்று நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.23 லட்ச த்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரை சென்னிமலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான ராஜசேகர் (32) என்பவர் அறந்தாங்கி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 5-ந் தேதி சரண் அடைந்திருந்தார்.

    இவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். பின்னர் சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ராஜசேகரை அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    அப்போது அவர் தான் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு மீதி ரூ.1 லட்சத்தை தனது சகோதரியான திருச்சி அருகே கோவில் வீரக்குடியை தமிழரசி என்பவரிடம் கொடுத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ராஜசேகரின் சகோதரி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி அவரி டம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    தற்போது ராஜசேகருக்கு போலீஸ் காவல் முடிந்ததால் போலீசார் ராஜசேகரை மீண்டும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் மற்ற யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது.
    • பஞ்சாயத்து செயலாளர்கள் ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அதிவேக இணையதள இணைப்பு வழங்கக்கூடிய பாரத்நெட் திட்டத்தில், 2-ம் கட்டமாக, தமிழ்நாடு பைபர் நெட் கார்பரேஷன் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது.

    இதற்காக ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படுகிறது. இக்கேபிள், 85 சதவீதம் மின் பாதை வழியாகவும், 15 சதவீதம் தரை வழியாக அமைக்கப்பட உள்ளது.

    இப்பணி நிறைவ டைந்ததும், கிராமங்களில் அகண்ட அலைவரிசை இணைப்புகள், 'வைபை' வசதி, தனி நபர் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், அகண்ட அலைவரிசை இணைப்புகளை குத்த கைக்கு விடுதல், செல்போன் டவர்களுக்கு இணைப்பு வழங்குதல் போன்ற முன்னேறிய தொழில் நுட்ப வசதி ஏற்படுத்தப்படும்.

    அனைத்து பஞ்.களிலும் கிராம ஊராட்சி சேவை மையங்கள், வட்டார வளர்ச்சி சேவை மையங்கள் இத்திட்டத்தின் இருப்பு புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.

    இச்சேவை மையங்களில் இருந்து, 3 கி.மீ., சுற்ற ளவுக்கு அனைத்து அரசு அலுவலக கட்டடங்களிலும் உள்ள இணைய தள வசதிகள் கணக்கெடுக்கப்ப ட்டு வருகிறது.

    இப்பணி முடிந்ததும் பஞ்சாயத்து சேவை மையங்களில் இருந்து ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம், 1 ஜி.பீ.பி.எஸ்., அதிவேக இன்டெர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இப்பணிக்கு, பஞ்சாயத்து செயலாளர்கள் ஒரு முனை தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

    வருவாய் துறை, வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த திட்ட உதவிகள், மானி யங்கள் பெற இ–சேவை மையங்கள் மூலம் மக்கள் விண்ணப்பிக்கின்றனர்.

    ஊரக வளர்ச்சி துறை மூலம் பஞ்சாயத்துகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் மற்றும் கட்டட அனுமதி ஆகிய வற்றுக்கான கட்டணங்களை ஆன்லைன் மூலமே மக்கள் செலுத்த அரசு உத்தர விட்டுள்ளது.

    அரசு பணிகள் அனை த்தும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளதால், அனைத்து பஞ்., பகுதிகளுக்கும் விரை வான அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல்பாட்டுக்கு அனைத்து தரப்பு மக்கள், விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

    • 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை விட ப்பட்டது. இதனை யடுத்து மாணவர்கள் கோடை விடுமு றையை கொண்டாடு வதற்காக தங்களது சொந்த ஊர்க ளுக்கும், உறவினர்கள் வீடு களுக்கும் சென்றனர்.

    கோடை விடுமுறை முடிந்த பின் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாண வர்களுக்கு ஜூன் 5-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் முடிந்த பின்னும் தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்த தால் பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோ ர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதன்படி பள்ளிகள் திறக்கும் நாள் ஜூன் 7-ந் தேதிக்கு தள்ளி வைக்க ப்பட்டது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையாமல் வறுத்தெடுத்து வந்ததால் பள்ளி திறப்பை மீண்டும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள், கல்வியா ளர்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 14-ந் தேதி இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கு பள்ளிகள் திறக்க ப்பட்டது. பள்ளி திறப்பை யொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடைவீதிகளில் பெற்றோ ர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகமாக இருந்தது.

    நோட்டு புத்தகம், ஷூ, சாக்ஸ் போன்ற கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே நேரம் பள்ளி திறப்பை யொட்டி பள்ளிக்கல்வி த்துறை சார்பில் அந்தந்த பள்ளிகளில் தூய்மை பணிகள் நடந்து வந்தன.

    பள்ளி வளாகம், வகுப்ப றைகள் தூய்மைப்படு த்தப்பட்டன. பள்ளி திறப்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டன.

    இந்நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்காக காலையிலேயே மாணவ ர்கள் குளித்து, பள்ளி சீருடை அணிந்து பெற்றோ ர்களுடன் பள்ளிக்கு கிளம்பி னர்.

    மாணவர்களை வரவேற்கும் விதமாக ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநக ராட்சி நடுநிலைப்பள்ளி யில் இன்று காலை புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாண விகளுக்கு ஆசிரி யர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதிய மாணவர்களுக்கு பேன்டு வாத்தியம் முழங்க ஆசிரியர்கள் பூ கொத்து கொடுத்து அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்து சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க ப்பட்டது.

    பள்ளிக்கு புதிதாக வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். இன்னும் சில பள்ளிகளில் வாழ தோரணங்கள் கட்டப்ப ட்டு பள்ளிகளுக்கு புதிதாக வந்த மாணவர்க ளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

    மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் இன்று பள்ளிகளுக்கு வந்தனர். புதிய நண்பர்கள், புதிய சூழல் என மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக ளுக்கு வந்தனர்.

    இதேபோல் யு.கே.ஜி. மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்றரை மாத விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் சில மாணவ-மாணவிகள் அழுது கொண்டே பள்ளிக்கு வந்தனர்.

    பள்ளிக்குள் நுழைந்த தும் தாய், தந்தை யை கட்டி அரவணைத்து பள்ளிக்கு செல்ல மா ட்டோம் என்று அழுது அடம் பிடித்தனர். அவர்க ளை ஆசிரியர்கள் சமாதா னப்படுத்தி வகுப்பறைக்குள் அழைத்து சென்றனர்.

    ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் 8,093 மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு வழங்கப்பட்டது.

    அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயலில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    முதல் நாளான இன்று பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 59 பள்ளிகளில் 8,238 மாணவர்களும், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளில் 665 மாணவர்கள் என 97 பள்ளிகளை சேர்ந்த 8903 மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

    • குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் பலர் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு இன்று காலை அந்தியூர் பத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை வழி பட்டனர்.

    இதனால் காலை வேளையில் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    அப்போது கோவிலுக்குள் ஒரு குதிரை திடீரென கோவிலுக்குள் புகுந்தது. கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் இருந்தனர். இதையடுத்து அந்த குதிரை பக்தர்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இதையடுத்து கோவில் பணியாளர்கள் குதிரையை கோவில் இருந்து வெளியே விரட்டும் பணியில் ஈடு பட்டனர். ஆனால் அந்த குதிரை கோவில் வளாக த்திலேயே நின்று கொண்டு இருந்தது.

    இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஒரு வித அச்ச உணர்வோடு உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சிறுது நேரத்துக்கு பிறகு அந்த குதிரை கோவில் வளாகத்தில் இருந்து வெளி யே சென்றது.

    இதனால் இன்று காலை அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அந்தியூர் பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிகிறது. மேலும் குதிரை ரோடுகளில் போக்குவரத்து இடையூறும் ஏற்படும் வகையில் உள்ளது. தற்போது கோவிலில் புகுந்து பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அந்தியூர் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புற ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
    • பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் இரு கரை பகுதிகளையும் காவிரி ஆற்று தண்ணீர் தொட்டபடி பாய்ந்து ஓடி செல்கிறது.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கர்நாடகா மாநிலத்தில் இருந்து பல்வேறு அணைகளில் வழியாக திறந்து விடப்படும் காவிரி ஆற்று நீர் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தண்ணீர் ஆண்டு தோறும் ஜூன் மாதம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் என டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் விவசாய நிலங்கள் பயன்பெ றும் வகையிலும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவேரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு 3-வது நாளான இன்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் இரு கரை பகுதிகளையும் காவிரி ஆற்று தண்ணீர் தொட்டபடி பாய்ந்து ஓடி செல்கிறது.

    • ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ராகி, மக்காச்சோளம், கம்பு, பச்சைப்பயிறு, தட்டப்பயிர் உள்ளிட்ட பயிர்களையும், பருவ நிலைக்கு ஏற்ப மற்ற வகை பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

    மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அந்த மழையினால் மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.62 ஆயிரத்து 401 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,664 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 20 ரூபாய் 23 காசுக்கும், அதிக பட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 22 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3,016 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.62 ஆயிரத்து 401 ரூபாய்க்கு விற்பனையானது.

    குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, குழுந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறையினை அகற்று வதற்கான உறுதி மொழி யான 'இந்திய அரசிய லமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தை களின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக் குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வ தை ஊக்குவிப்பேன் எனவும்,

    குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்து வேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்று வதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறு கிறேன்" என அனைத்து த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட கலெக்டரை பின் தொடர்ந்து வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொ ண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் மற்றும் வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களையும் ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியினையும் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோ ஷினி சந்திரா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுபாப்பு திட்டம்) குமரன், தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வயிற்று வலி தாங்க முடியாமல் விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர், ராமலிங்கம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்தன பாரதி (32). இவரது அத்தை இந்திராணி (71). கடந்த 2 வருடமாக இந்திராணிக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சந்தனபாரதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்திராணி ஏதேதோ கூறிக்கொண்டு முனகி கொண்டிருந்தார்.

    அவரது அருகே சென்று பார்த்த போது அவர் மீது விஷ வாடை அடித்ததால் சந்தேகப்பட்டு சந்தைபாரதி அவரிடம் கேட்டபோது வயிற்று வலி தாங்க முடியாமல் மஞ்சள் மூட்டைக்காக வாங்கி வைத்திருந்த சல்பாஸ் (விஷம்) மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரது உடல நிலை மோசமானதால் இந்தி ராணியை காப்பாற்ற இயலாது. வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் இந்திராணி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடல் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • திடீரென பெய்த இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்தது. இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கொண்டனர்.

    இந்நிலையில் மாலையில் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக நம்பியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1.30 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 41 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வரட்டு ப்பள்ளம், குண்டேரி பள்ளம் பகுதிகளில் இடியு டன் கூடிய கனமழை பெய்தது.

    சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கவுந்த ப்பாடி, சென்னிமலை பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது.

    இதேபோல் மொடக்கு றிச்சி சுற்றுவட்டா ர பகுதி யில் மாலையில் கருமேக ங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனை த்தொ டர்ந்து மாலை 3.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழையானது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் மொடக்குறிச்சி, சோலார், கஸ்பாபே ட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியாக காணப்பட்டது.

    கோடை மழை பெய்ததையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-41, வரட்டுப்பள்ளம்-28.40, குண்டேரிபள்ளம்-26.60, சத்தியமங்கலம்-11, அம்மா பேட்டை-9, கவுந்தப்பாடி-5.40, எலந்த குட்டைமேடு-3.40, சென்னிமலை-2, மொடக்குறிச்சி-2.

    • அறையில் கணவர் தூக்குபோட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு 46 புதூர் வேல பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கில்பர்ட் (30). இவரது மனைவி ஆரோக்கியரோசாலி (27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஜான் கில்பர்ட் லக்காபு ரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அவரது மனைவி கண்டித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிக்ஸ் கம்பெனி க்கு விடுமுறை என்பதால் வாங்கிய சம்பளத்தில் அதிக அளவில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ஜான் கில்பர்ட் வீட்டுக்கு வந்து உள்ளார். அவர் மனைவி யிடம் தகராறில் ஈடுபட்டு அவர் வெளியே போகச் சொல்லி திடீரென வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.

    சிறிது நேரம் பார்த்து விட்டு அவரது மணி வீட்டின் கதவை தட்டி யுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கணவர் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு சிகிச்சை க்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே வரும் வழி யிலேயே ஜான் கில்பர்ட் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜான் கில்பர்ட் உடலைப் பார்த்து அவரது மனைவி- குழந்தை கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    ×