என் மலர்
நீங்கள் தேடியது "touching both banks"
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
- பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் இரு கரை பகுதிகளையும் காவிரி ஆற்று தண்ணீர் தொட்டபடி பாய்ந்து ஓடி செல்கிறது.
பவானி:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கர்நாடகா மாநிலத்தில் இருந்து பல்வேறு அணைகளில் வழியாக திறந்து விடப்படும் காவிரி ஆற்று நீர் மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தண்ணீர் ஆண்டு தோறும் ஜூன் மாதம் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-வது முறையாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் என டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் விவசாய நிலங்கள் பயன்பெ றும் வகையிலும், பொது மக்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவேரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு 3-வது நாளான இன்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் இரு கரை பகுதிகளையும் காவிரி ஆற்று தண்ணீர் தொட்டபடி பாய்ந்து ஓடி செல்கிறது.






