ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக பெய்த மழை

ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.திடீரென பெய்த இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது.
ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக பெய்த மழை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்தது. இதனால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கொண்டனர்.

இந்நிலையில் மாலையில் ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக நம்பியூர் மட்டும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1.30 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 41 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல் மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. வரட்டு ப்பள்ளம், குண்டேரி பள்ளம் பகுதிகளில் இடியு டன் கூடிய கனமழை பெய்தது.

சத்தியமங்கலம், அம்மாபேட்டை, கவுந்த ப்பாடி, சென்னிமலை பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை எழுதியது.

இதேபோல் மொடக்கு றிச்சி சுற்றுவட்டா ர பகுதி யில் மாலையில் கருமேக ங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனை த்தொ டர்ந்து மாலை 3.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழையானது அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் மொடக்குறிச்சி, சோலார், கஸ்பாபே ட்டை, 46 புதூர், லக்காபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ச்சியாக காணப்பட்டது.

கோடை மழை பெய்ததையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நம்பியூர்-41, வரட்டுப்பள்ளம்-28.40, குண்டேரிபள்ளம்-26.60, சத்தியமங்கலம்-11, அம்மா பேட்டை-9, கவுந்தப்பாடி-5.40, எலந்த குட்டைமேடு-3.40, சென்னிமலை-2, மொடக்குறிச்சி-2.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com