என் மலர்
ஈரோடு
- அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
- பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை களை முடிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் ஈரோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அலுவலகத்தில் எல்.பி.எப். மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்ரமணியன், எல்.பி.எப். மாவட்ட பொருளாளர் தங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை எதிர்த்து 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் (இன்று) 15-ந் தேதி முதல் மேற்கொள்ள இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஈரோடு, தொழிலாளர் உதவி ஆணையரின் அறிவுரை ப்படி வருகின்ற 22-ந் தேதி வரை தற்காலி கமாக ஒத்தி வைப்பது, பேச்சு வார்த்தைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை களை முடிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. சங்க செயலாளர் மணியன், சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் மாணிக்கம், எல்.பி.எப். சங்க செயலாளர் கிருஷ்ணன், ஆதி தமிழர் தூய்மை தொழிலாளர் சங்க தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
- 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 3 பேர் காரில் சத்தியமங்கலம் அருகே உள்ள சிங்கிரி பாளையம் என்ற பகுதிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.
இன்று காலை 9 மணியளவில் அவர்கள் பண்ணாரி அருகே 1-வது சுற்று அருகே மலைபாதையை விட்டு இறங்கினர்.
அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை இயக்கி உள்ளனர். இதில் வேகமாக சென்ற கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் வந்த நாசிர் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு 8 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.
- துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு வருகிற 19-ந் தேதி முதல் தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வானது ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி, கோபி வைர விழா மேல்நிலை ப்பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.
இதில் 4 மையங்கள் பிளஸ் -2 தேர்வினை ஏற்கனவே எழுதி தோல்வியுற்றவர்களுக்கும், புதிதாக பிளஸ்-2 தேர்வும் தனித்தேர்வர்களுக்கு 4 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிளஸ்-1 துணைத்தேர்வு வரும் 27-ந் தேதி தொடங்கி ஜூலை மாதம் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான வினாத்தாள்கள் ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடைத்தாள் மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த துணை த்தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறை மற்றும் பள்ளிக்க ல்வித்துறை செய்து வருகிறது.
- மாணவன் கமல் நாத் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முருகேசன். விசைத்தறி கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி.
இவர்களது மகன் கமல் நாத். இவர் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் மாணவன் கமல் நாத் 720-க்கு 623 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 561 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவன் கமல் நாத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- பெருந்துறைக்கு புறப்பட்டு சென்று விடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னிமலை:
சென்னிமலை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை முடிந்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல சென்னிமலை பஸ் நிலையத்துக்கு வருவது உண்டு.
சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலையில் 6.40 மணிக்கு சி-13 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் பெருந்துறைக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த அரசு டவுன் பஸ்சை பெரும்பா லான பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் சமீப காலமாக இந்த பஸ் முன் கூட்டியே அதாவது 6.20 மணிக்கே சென்னிமலை பஸ் நிலையத்தி ல் இருந்து பெருந்துறைக்கு புறப்பட்டு சென்று விடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், சி-13 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் தினமும் மாலையில் 6.40 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது வேலை முடிந்து வரும் தொழிலாளர்களுக்கு வசதியாக இருந்தது.
ஆனால் இந்த பஸ் சமீப காலமாக 20 நிமிடம் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விடுவதால் அந்த நேரத்தில் பஸ் இல்லாமல் அவதிப்பட வேண்டியதாக இருக்கிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் காங்கேயம் கிளை மேலாளர் மற்றும் ஈரோடு மேலாளருக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஏற்கனவே உள்ள கால அட்டவணையின் படி மாலை 6.40 மணிக்கு சி-13 அரசு டவுன் பஸ் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- விவசாயிகள் கலை நிகழ்ச்சி கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் நடைபெற்றது.
- உழவன் செயலி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
ஈரோடு:
வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டம் செயல்படும் நஞ்சைகொளாநல்லி கிராமத்தில் விவசாயிகள் கலை நிகழ்ச்சி கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மைதுறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் அதன் நோக்கம் பற்றியும் தரிசு நிலத்தொகுப்பு குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்ச்சியின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்க ப்பட்டது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டதின் மூலம் வழங்கப் படும் இடு பொருட்கள், இடு பொருட்களை விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பதிவு செய்ய உழவன் செயலி உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கலை நிகழ்ச்சியில் ஊராட்சி பேபி செந்தில் குமார், வேளாண்மை அலு வலர் ரேகா, உதவி வேளா ண்மை அலுவலர் மாதவன், உதவி தோட்ட க்கலை அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கணேசன் வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.
- தனியார் மருத்துவமனைக்கு கணேசன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி, முதல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (43). இவரது மனைவி மலர்மணி (33). கணேசன் புங்கம் பள்ளியில் அரசு கால்நடை மருத்துவமனையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் உடல்நிலம் பாதிக்கப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த சில மாதங்களாக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று கணேசன் வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணேசன் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்த னர்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
- கருணா என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் புனித இஞ்ஞாசியர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ், மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள்.
வழக்கம் போல் இன்று காலையும் பள்ளிக்கு சொந்தமான மினிபஸ்சித்தார், மூன்று ரோடு, சேவானூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இந்நிலையில் பள்ளி பஸ் அம்மாபேட்டை அருகே உள்ள சாரி கொட்டாய் என்ற இடம் அருகே இன்று காலை 8.30மணியளவில் வந்த போது சேவானூர் தழுக்கனூர் பகுதியை சேர்ந்த கருணா (11) என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மினி பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
பின்னர் மயக்கம் அடை ந்த மாணவன் கருணாவை சிகிச்சைக்காக அருகில் இருந்த பொது மக்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக பாதி மாணவ, மாணவிகள் மினிபஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் 2 முறை மாணவ, மாணவிகளை மினி பஸ் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.59 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.97 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1014 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.59 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.21 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.28 அடியாகவும் உள்ளது.
- முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு:
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து அழைத்து சென்றபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று மாலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு 46 புதூர் அருகே பச்சைபாளி ரோடு பகுதியில் இருக்கும் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு டவுன் போலீசார் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் முற்றுகையிட வந்த நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவல கத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகத்திற்கு வரும் நிர்வாகிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதைத்தவிர வேறு யாரும் சந்தேகப்படும்படியாக அந்த பகுதியில் சுற்றித்திரிந்தால் அவர்களை போலீசார் அனுப்பி விடுகின்றனர்.
- 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
- எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும்
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் கரை அமைக்கும் பணியை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்த்தும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி பழைய கட்டுமானங்கள், பழுதடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்க 2 தரப்பு விவசாயிகளும் ஒப்பு கொண்டனர்.
ஆனால் சில இடங்களில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் பணி நடந்ததால் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஈரோடு அடுத்த வாய்க்கால் மேட்டில் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு, கருப்பு கொடியேற்றம், கோபி பகுதியில் இருந்து வாகனங்களில் பேரணி நடத்தினர். வணிகர்கள் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர் முத்துசாமி நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் சில கோரிக்கைகள் வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 7 நாட்களாக நடந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.
இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்து, பழைய கட்டுமானங்களை சீரமைக்க கோரியும், மண் கால்வாய்களை மண்ணைக்கொண்டே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி 7 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு தரப்பில் அமைச்சர் முத்துசாமி எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவுவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும். எங்களை பொறுத்தவரை கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களை செய்ய சொல்லியுள்ளோம். புதிய கட்டுமானங்களை அந்த பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக தேவையற்ற இடங்களில் கட்டுமானங்களை செயல்படுத்தக்கூடாது.
எதிர்கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது பொதுமக்கள், விவசாயிகள் கருத்தை கேட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எங்களது நியாயமான கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.
- வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூர், ஓழகடம், கோமியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (35).சம்பவத்தன்று செந்தில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
வெள்ளோடு-பெருந்துறை சென்னிமலை ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.
இதில் நெஞ்சி பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்து கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






