என் மலர்
நீங்கள் தேடியது "Chennimalai bus stand"
- பெருந்துறைக்கு புறப்பட்டு சென்று விடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
- தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னிமலை:
சென்னிமலை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள் மாலை 6 மணிக்கு மேல் வேலை முடிந்து வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல சென்னிமலை பஸ் நிலையத்துக்கு வருவது உண்டு.
சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலையில் 6.40 மணிக்கு சி-13 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் பெருந்துறைக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த அரசு டவுன் பஸ்சை பெரும்பா லான பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் சமீப காலமாக இந்த பஸ் முன் கூட்டியே அதாவது 6.20 மணிக்கே சென்னிமலை பஸ் நிலையத்தி ல் இருந்து பெருந்துறைக்கு புறப்பட்டு சென்று விடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், சி-13 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ் தினமும் மாலையில் 6.40 மணிக்கு சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது வேலை முடிந்து வரும் தொழிலாளர்களுக்கு வசதியாக இருந்தது.
ஆனால் இந்த பஸ் சமீப காலமாக 20 நிமிடம் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விடுவதால் அந்த நேரத்தில் பஸ் இல்லாமல் அவதிப்பட வேண்டியதாக இருக்கிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் காங்கேயம் கிளை மேலாளர் மற்றும் ஈரோடு மேலாளருக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு ஏற்கனவே உள்ள கால அட்டவணையின் படி மாலை 6.40 மணிக்கு சி-13 அரசு டவுன் பஸ் புறப்பட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






