குடிபோதையில் சாக்கடையில் தவறி விழுந்து வாலிபர் பலி

நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் சாக்கடையில் தவறி விழுந்து வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூர், ஓழகடம், கோமியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (35).சம்பவத்தன்று செந்தில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

வெள்ளோடு-பெருந்துறை சென்னிமலை ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் நிலை தடுமாறு ரோட்டில் அருகே இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.

இதில் நெஞ்சி பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்து கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com