search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager dies"

    • கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
    • 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 3 பேர் காரில் சத்தியமங்கலம் அருகே உள்ள சிங்கிரி பாளையம் என்ற பகுதிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

    இன்று காலை 9 மணியளவில் அவர்கள் பண்ணாரி அருகே 1-வது சுற்று அருகே மலைபாதையை விட்டு இறங்கினர்.

    அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை இயக்கி உள்ளனர். இதில் வேகமாக சென்ற கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் காரில் வந்த நாசிர் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • விபத்தில் பவிஸ் சம்பவ இடத்திலயே பலியானார்.
    • காயம் அடைந்த ஹரிகரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம், எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (27) கூலித் தொழிலாளி. இவரது மகன் பவிஸ் (23), சம்பவத்தன்று பவிஸ் மற்றும் அவரது நண்பர் ஹரிகரன் தங்கள் நண்பர் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் புட்டுவிக்கியில் இருந்து கோவைப்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஹரிகரன் ஓட்டி வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பவிஸ் சம்பவ இடத்திலயே பலியானார்.

    இதில் படுகாயமடைந்த ஹரிகரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கோவை,

      சேலத்தை சேர்ந்தவர் தாயுமானவன் (27). இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையில் இருந்த தாயுமானவன் உடற்பயிற்சி செய்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

      • காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
      • இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      பெருந்துறை:

      பவானி, சலங்கை பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). கட்டிட மேஸ்திரி.

      சம்பவத்தன்று செல்வராஜ் காஞ்சிக்கோ வில் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வத ற்காக கவுந்தப்பாடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

      அப்போது காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

      இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • நண்பர் படுகாயம் அடைந்தார்.
      • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

      கோவை,

      கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 21).

      இவர் சிட்கோ பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

      இவரது நண்பர் மதுக்கரை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் நித்திஷ் (22). பொங்கல் விடுமுறையான நேற்று நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பாலக்காடு சென்றனர்.

      பின்னர் அங்கிருந்து 2 பேரும் கோவை திரும்பினர். மோட்டார் சைக்கிளை சூரியபிரகாஷ் ஓட்டினார்.

      அப்போது பாலக்காடு-கோவை ரோடு கே.ஜி சாவடி அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டு இருந்த கன்டெய்னர் லாரி திடீெரன எந்த சிக்னலும் இல்லாமல் இடது புறம் திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.

      இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சூரியபிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

      நித்திஷ்சுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • சிங்கம்புணரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
      • இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      சிங்கம்புணரி

      புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிச்சங்காளபட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் ராவணன் (வயது 22). இவர் தனது தந்தை ஆறுமுகம் இறந்த பிறகு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

      இந்த நிலையில் ராவணன் மருதிபட்டியில் இருந்து சிங்கம்புணரியை நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அவர் அ.காளாப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதமாக மோட்டார்சைக்கிள் மின்கம்பம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராவணனை மீட்டு சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      ×