புளியமரத்தில் கார் மோதி வாலிபர் பலி

கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.2 பேர் படுகாயம் அடைந்தனர்.
புளியமரத்தில் கார் மோதி வாலிபர் பலி
Published on

சத்தியமங்கலம்:

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 3 பேர் காரில் சத்தியமங்கலம் அருகே உள்ள சிங்கிரி பாளையம் என்ற பகுதிக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

இன்று காலை 9 மணியளவில் அவர்கள் பண்ணாரி அருகே 1-வது சுற்று அருகே மலைபாதையை விட்டு இறங்கினர்.

அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை இயக்கி உள்ளனர். இதில் வேகமாக சென்ற கார் ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் வந்த நாசிர் (40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். மற்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com