மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

சிங்கம்புணரி அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
Published on

சிங்கம்புணரி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பிச்சங்காளபட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் ராவணன் (வயது 22). இவர் தனது தந்தை ஆறுமுகம் இறந்த பிறகு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிபட்டியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராவணன் மருதிபட்டியில் இருந்து சிங்கம்புணரியை நோக்கி தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அவர் அ.காளாப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதமாக மோட்டார்சைக்கிள் மின்கம்பம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராவணனை மீட்டு சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com