என் மலர்
உள்ளூர் செய்திகள்

ேமாட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- நண்பர் படுகாயம் அடைந்தார்.
- தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (வயது 21).
இவர் சிட்கோ பகுதியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவரது நண்பர் மதுக்கரை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் நித்திஷ் (22). பொங்கல் விடுமுறையான நேற்று நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பாலக்காடு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 2 பேரும் கோவை திரும்பினர். மோட்டார் சைக்கிளை சூரியபிரகாஷ் ஓட்டினார்.
அப்போது பாலக்காடு-கோவை ரோடு கே.ஜி சாவடி அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டு இருந்த கன்டெய்னர் லாரி திடீெரன எந்த சிக்னலும் இல்லாமல் இடது புறம் திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சூரியபிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
நித்திஷ்சுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






