வேன் மோதிய விபத்தில் வாலிபர் சாவு

காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேன் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
Published on

பெருந்துறை:

பவானி, சலங்கை பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). கட்டிட மேஸ்திரி.

சம்பவத்தன்று செல்வராஜ் காஞ்சிக்கோ வில் பகுதியில் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்வத ற்காக கவுந்தப்பாடி ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சிக்கோவில் நோக்கி வந்த ஒரு வேன் எதிர்பாராத விதமாக செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com